states

img

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2228 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2228 கோடி ஒதுக்கீடு

கேரளத்தில் உள்ள மூன்றடுக்கு பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கு ரூ.2,228.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி யமைச்சர் கே.என்.பாலகோபால் அறி வித்தார். இந்த நிதியாண்டிற்கான மேம் பாட்டு நிதியின் முதல் தவணையாக ரூ. 2,150.30 கோடியும், நிபந்தனையற்ற நிதி யாக ரூ.78 கோடியும் ஒதுக்கப்பட்டது. மேம்பாட்டு நிதியிலிருந்து கிராம பஞ்சாயத்துகள் ரூ.1,132.79 கோடியைப் பெறும். மாவட்ட மற்றும் ஒன்றிய பஞ்சா யத்துகளுக்கு தலா ரூ.275.91 கோடியும், நகராட்சிகளுக்கு ரூ.221.76 கோடியும், மாநகராட்சிகளுக்கு ரூ.243.93 கோடியும் கிடைக்கும். நகராட்சிகளில், மில்லியன் பிளஸ் நகரங்களில் சேர்க்கப்படாத 86 நகராட்சிகள் ரூ.77.92 கோடியைப் பெறும். கண்ணூர் மாநகராட்சி ரூ.8,46,500 பெறும். நகராட்சிகள் மொத்தம் ரூ.300 கோடி பெறுகின்றன. இதன் மூலம், உள்ளூர் சுய-அரசு (உள்ளாட்சி) நிறுவ னங்கள் இந்த நிதியாண்டிற்கான தங்கள் திட்ட நடவடிக்கைகளை ஏப்ரல் மாதத்தி லேயே செயல்படுத்தத் தொடங்க முடியும்.