புதுதில்லி ஜேஜே காலனியில் புதிய ரேஷன் கார்டுகளை உடனடியாக வழங்க கோரியும், ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது; சர்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை உள்ளடக்கிய ரேஷன் விநியோகங்களை விரிவாக்கம் செய்யக் கோரி உணவு ஆணையர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் ஜேஜே காலனியைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.