states

img

புனேயில் முதல் பலி ; 16 பேர் செயற்கை சுவாசத்தில்!

மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல்

உலகம் முழுவதும் 1880 முதல் 1920ஆம் ஆண்டு வரை குய்லின்-பார்ரே என அழைக்கப்படும் தொற்று நோய் மிக மோசமான அளவில் பரவியது. ஆயி ரக்கணக்கானோரை காவு வாங்கிய இந்த குய்லின்-பார்ரே நோயின் பர வல் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சற்று குறைந்தது. ஆனால் மீண்டும் 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு பன்றிக்காய்ச்சலோடு குய்லின்-பார்ரே தொற்றும் வேகமாக பரவ ஆரம்பித்தது. ஆனால் பெரியளவு உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்பதால் இந்த குய்லின்-பார்ரே தொற்று உலகளவில் பெரிதாகப் பேசப்படாத நோயாக உள்ளது. ஆனால் தற்போதைய சூழலில், ஒரு சில நாடுகளில்  அவ்வப்போது குய்லின்-பார்ரே வைரஸ் பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

புனேயில் ஒருவர் பலி

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்று வட்டாரப் பகுதி யில் குய்லின்-பார்ரே தொற்று வேக மாக பரவி வருகிறது. அம்மாநில சுகா தாரத் துறை அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, “ஞாயிற்றுக்கிழமை புனேவில் மொத்த குய்லின்-பார்ரே  நோய் தொற்று வழக்குகளின் எண் ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. இதில் 68 ஆண்கள் மற்றும் 33 பெண் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்க ளில் 16 பேர் செயற்கை சுவாசத்தின் ஆதரவில் கவலைக்கிடமான நிலை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புனே அருகே சோலாப்பூரில் 40 வயது மிக்க ஒருவர் குய்லின்-பார்ரே தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இது சந்தேக மரணமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

குய்லின்-பார்ரே  குணப்படுத்த முடியுமா?

குய்லின்-பார்ரே நோய் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை முற்றி லும் குறைத்து, நரம்புகளை அழிக்கக் கூடியது ஆகும். அதே போல கை, கால்களை பலவீனமாக்கி ஒட்டு மொத்த உடலையும் போலியோ பாதிப்பைப் போன்று முடக்கி விடும். குறிப்பாக இடுப்புக்குக் கீழ் உள்ள  பகுதிகளை முற்றிலுமாக செயலி ழக்கச் செய்து விடும். இந்நோய்க்கு ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை அளித்தால் 90% குணப்படுத்தலாம். ஆனால் சிகிச்சை காலம் மிக அதிக நாட்கள் நீடிக்கும். நோயாளிகளின் உடலைப் பொறுத்து ஒருவருடம் கூட ஆகலாம். இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 1 லட்சம் பேரை பாதிக்கிறது. அதில் 7.5% பேர் (750 பேர்) உயிரிழந்துள்ளனர். அறிகுறியே கிடையாது குய்லின்-பார்ரே நோய்க்கு என தனியாக அறிகுறிகள் எதுவும் கிடை யாது. மூச்சு வாங்குதல் மற்றும் முதுகு வலியை கணக்கிட்டு சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென் றால் மட்டுமே இந்த நோயை முன் கூட்டியே கண்டறிய முடியும். ஆனால் நோய் முற்றிய நிலையில் சென்றால் போலியோ தாக்குதல் போல உட லுறுப்புகள் செயலிழக்கும். குய்லின்-பார்ரே அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டை நடக்க முடியாத நிலைமைக்கு முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பதற்றத்தை ஏற்படுத்தும் மோடி அரசின் அலட்சியம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்று வட்டாரப் பகுதியில் மட்டுமே குய்லின்-பார்ரே நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் எதன் காரணமாக புனேவில் மட்டும் திடீரென பரவி வருகிறது? புனேவில் வேறு எதுவும் சுகாதா ரச் சீர்கேடு நிலவி வருகிறதா? என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள் ளன. ஆனால் இதுதொடர்பாக மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசும், ஒன்றிய மோடி அரசும் எவ் வித பதிலும் அளிக்கவில்லை. இத னால் குய்லின்-பார்ரே நோய் தொடர்பாக நாடு முழுவதும் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது.