states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஹிமான்ஷியின் வீட்டிற்கே சென்று ஆதரவு அளித்த  ராகுல் காந்தி

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதி யில் ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்  லப்பட்ட 26 பேரில் இந்திய கடற்படை அதி காரி வினய் நர்வாலும் ஒருவர். தனது  மனைவி ஹிமான்ஷியுடன் பஹல்கா மிற்கு சுற்றுலா சென்ற போது பயங்கர வாதிகளின் துப்பாக்கிச் சூட்டில், மனை வியின் கண் முன்னே பலியானார். இத்தகைய சூழலில் தனது கணவர் மர ணத்தை வைத்து இந்துத்துவா குண்டர் கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவ தூறு பரப்புவதை கண்டித்து, கடந்த  வாரம் ஹிமான்ஷி,”யார் மீதும் வெறுப்பு  இருக்கக்கூடாது. இஸ்லாமியர்கள் அல்  லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பை  உமிழ்வதை நான் பார்க்கிறேன். நாங்  கள் இதை விரும்பவில்லை. அமைதியை  மட்டுமே விரும்புகிறோம்” எனக் கூறி யிருந்தார். ஹிமான்ஷியின் இந்த கருத்தால் தங்களது இந்துத்துவா அரசியலுக்கு சிக்  கல் வரும் என்பதை உணர்ந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் உள்  ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் ஹிமான்  ஷிக்கு எதிராக ஆபாச அவதூறு பரப்ப  ஆரம்பித்தனர். இதற்கு தேசிய மகளிர்  ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.  அதே போல நாடு முழுவதும் ஹிமான் ஷிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலை வரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவ ருமான ராகுல் காந்தி செவ்வாய்கிழமை அன்று ஹரியானா மாநிலம் கர்னலில் உள்ள வினய் நர்வாலின் வீட்டிற்குச்  சென்று, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலும், ஹிமான்ஷிக்கு நாடு முழு  ஆதரவை வழங்கும் என அவர் உறுதி யளித்தார். இந்த சந்திப்பின் போது காங்கி ரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  ரோஹ்தக் நாடாளுமன்ற உறுப்பினருமான தீபேந்தர் சிங் ஹூடாவும் உடனிருந்தனர்.

“பஹல்காம் தாக்குதல் நடக்கப்போவது ஒன்றிய அரசுக்கு முன்னரே தெரியும்”

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் தாக்கு தல் நடக்கப் போவது ஒன்றிய அர சுக்கு முன்னரே தெரியும் என காங்  கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே  பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநி லம் ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்  கூட்டத்தில் அவர்  பேசுகையில், “பஹல்  ஹாமில் பயங்கரவாத தாக்குதல் நடத் தப் போவது ஒன்றிய அரசுக்கு முன்பே தெரியும். 3 நாட்களுக்கு முன்பே புல னாய்வு அமைப்பு பிரதமர் மோடிக்கு தாக்குதல் தொடர்பான தகவலை அளித்  துள்ளது. தாக்குதல் எச்சரிக்கை பற்றி  முன்பே அறிந்ததாலேயே பிரதமர் மோடி  தனது ஜம்மு-காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். அவரது உயிருக்கு கொடுக் கும் மதிப்பை, சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை? ஏன் பாதுகாப்பை காஷ்மீரில் பலப்  படுத்தவில்லை? காஷ்மீரில் துணை ராணுவப்படையினர், எல்லை பாது காப்பு படையினர், ராணுவம் உள்ளது.  இருந்த போதிலும் ஏன் அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை?  பஹல்காம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக புல னாய்வு துறை தகவல் கொடுத்த பின்ன ரும் பிரதமர் அலட்சியமாக இருந்துள் ளார். இது மிகவும் மோசமானது” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கிளம்பி வரும்  சூழலில், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கேவின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற  நீதிபதிகளின் சொத்து மதிப்பு வெளியீடு

வெளிப்படைத்தன்மையை  மேம்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தங்களது சொத்து மதிப்பு தொடர்பான  விபரங்களை திங்களன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றி வெளி யிட்டனர்.  அதில் ஓய்வு பெறவுள்ள தற்போ தைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வங்கியில் ரூ.55.75 லட்சம்  மதிப்பிலான நிலையான வைப்பு தொகை யும், தென் தில்லியில் மூன்று படுக்கை யறை கொண்ட டிடிஏ குடியிருப்பு மற்றும்  2,446 சதுர அடி பரப்பளவு கொண்ட காமன்  வெல்த் கேம்ஸ் கிராமத்தில் நான்கு படுக்  கையறை அபார்ட்மென்ட் ஆகியவை தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதே போன்று சஞ்சீவ் கன்னா ஓய் விற்கு பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதி பதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர். கவாய் வங்கியில் ரூ.19.63 லட்சம் நிலை யான வைப்பு தொகை, மகாராஷ்டிரா வின் அமராவதியில் இறந்த அவரது தந்  தையிடமிருந்து பெறப்பட்ட வீடு, மும்பை யின் பாந்த்ரா மற்றும் தில்லியின் டிபென்ஸ் காலனியில் அபார்ட்மெண்ட்கள், அமரா வதி மற்றும் நாக்பூரில் வேளாண் நிலங் கள் ஆகியவை தனக்கு இருப்பதாக உச்ச நீதிமன்ற இணையதளம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதே போல உச்சநீதி மன்றத்தில் மொத்தமுள்ள 33 நீதிபதி களில், தலைமை நீதிபதி உள்பட 21 நீதி பதிகள் தங்களது சொத்து விவரங்களை அளித்துவிட்டனர்.