தேர்தல் பிரச்சாரங்களில் ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகத்தின் உள்ளே வெற்றுத் தாள்களே உள்ளதாகவும், போலியான புத்தகத்தைக் காட்டி அவர் பிரச்சாரம் செய்வதாகவும் பிரதமர் மோடி மகா ராஷ்டிரா தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண் டார். இந்நிலையில், “அரசியலமைப்பு சட்டத்தை படிக்காததால் அது பிரதமர் நரேந்திர மோடிக்கு வெற்றுப் புத்தகமாக தெரிகிறது” என காங்கிரஸ் மூத்த தலைவ ரும், மக்களவை எதிர்கட்சித் தலைவரு மான ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள் ளார். மகாராஷ்டிராவின் நந்தூர்பாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”பொதுக்கூட்டங்க ளில் நான் காட்டும் அரசியல் சாசன புத்த கத்தில் வெற்றுப் பக்கங்கள் உள்ளதாக பிரதமர் மோடி கூறுகிறார். மோடிக்கு அரசி யல் சாசனம் காலியாக உள்ளது. ஏனென் றால் அவர் அதைப் படிக்கவில்லை. அத னால் தான், நான் காட்டும் புத்தகத்தின் அட்டை சிவப்பு நிறமாக இருப்பதாகக் கூறி அதிலும் அரசியல் செய்கிறார்கள். நான் பாஜகவினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், அதன் நிறம் எங்களுக்கு முக்கிய மில்லை. ஆனால் அதில் என்ன எழுதப் பட்டுள்ளது என்பதே முக்கியம். அதைப் பாதுகாக்க நாங்கள் எங்கள் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கி றோம். இந்த அரசியலமைப்பு வெற்று இல்லை. இது சுதந்திரப் போராட்ட தலை வர்களான பிர்சா முண்டா, புத்தர், காந்தி, பூலே ஆகியோரின் சிந்தனைக ளைக் கொண்டுள்ளது. இந்த அரசிய லமைப்பில் இந்தியாவின் ஆன்மா, இந்தி யாவின் அறிவு உள்ளது. அரசியலமை ப்புச் சட்டத்தை வெறுமையானது என்று கூறி பிர்சா முண்டா, புத்தர், காந்தி, பூலே, அம்பேத்கர் ஆகியோரை மோடி அவ மதிக்கிறார்” என குற்றம் சாட்டினார்.