பாஜக ஆளும் உத்தரப்பிரதே சத்தின் மிர்சாபூரில் உள்ள சுனார் கிராமத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் மாவட்ட அளவிலான தலைவ ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான தோழர் ராம் அச்சல் நிலத்தகராறு பிரச்சனை காரணமாக அக்டோபர் 22 அன்று உள்ளூர் குண்டர் களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் ராம் அச்சலின் மனைவி கிஷ்மிஷ் தேவி மற்றும் அவரது மகன்கள் ராம் கிஷன் மற்றும் ரவி சந்திரா, மருமகள் அர்ச்சனா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்நிலையில், அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் தூதுக்குழு சுனார் கிராமத்திற்குச் சென்று அச்ச லின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியது. குடும்பத்தினரிடம் குற்றவாளி கள் தண்டிக்கப்படும் வரை நீதிப் போராட்டம் நடத்தப்படும் என தூதுக்குழு தலைவர்கள் உறுதியளித்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அச்சலின் மனைவி கிஷ்மிஷ் தேவியையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். வரும் நாட்களில் தோழர் ராம் அச்சல் படுகொலைக்கு எதிராக மாபெரும் கண்டனப் போராட்டம், பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நீதிக்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தூதுக்குழு தலைவர்கள் உறுதியளித்தனர். தூதுக் குழுவில் விவசாயத் தொழிலாளர் சங்க இணைச் செயலாளர் விக்ரம் சிங், மாநிலத் தலை வர் சதீஷ்குமார், மாநில இணைச் செயலா ளர் ராம் நிவாஸ், மிர்சாபூர் மாவட்டச் செயலாளர் ஷிவ்குமார், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் குலாப்சந்த் உட்பட பலர் இருந்தனர்.