பிரதமர் நரேந்திர மோடி பிப்ர வரி மாதம் அமெரிக்கா வர வாய்ப்புள்ளது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து டிரம்ப்பிடம் செய்தியா ளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெ ரிக்கா வர வாய்ப்புள்ளது.எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு உள்ளது என அவர் தெரிவித்தார். மேலும் போதிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை மோடி திரும்பப் பெற்றுக்கொள்வாரா என கேட்கப் பட்ட கேள்விக்கு மோடி சரியானதை செய்வார் எனவும் இதுகுறித்து அவருடன் பேசிவருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.