states

img

தேசியக் கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

புதுதில்லி, ஜன. 27 - நாட்டின் 76-ஆவது குடியரசு தினம் ஞாயிறன்று நாடு முழு வதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. தில்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.  தலைநகர் தில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெற்ற இவ்விழாவையொட்டி, குதிரைப் படை சூழ சாரட் வாகனத்தில் விழா வுக்கு வந்த குடியரசுத் தலைவர் திர வுபதி முர்மு, சிறப்பு விருந்தினரும் இந்தோனேசிய ஜனாதிபதியுமான பிரபோவா சுபியாண்டோவை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவை சபாநாய கர் ஓம் பிர்லா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா. முப்படை களின் தலைமைத் தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படை தளபதி கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

பின்னர் நாட்டின் ராணுவ வலிமை யை பறைசாற்றும் வகையில் ராணு வம், கடற்படை, விமானப் படை  வீரர்களின் அணிவகுப்பு நடை பெற்றது. துணை கமாண்டர் ஐஸ்வர்யா ஜாய் தலைமையில் சிஆர்பிஎப் படை வீராங்கனைகள் மிடுக்காக அணிவகுத்தனர். என்சிசி பெண்கள் அணியின் அணிவகுப்பை ஏக்தா குமாரி தலைமை ஏற்று நடத்தினார். என்சிசி பெண்கள் இசைக் குழுவை அனிதா குமாரி வழிநடத்தினார். கமாண்டர் தீபக் சிங் தலைமையில் என்எஸ்எஸ் பெண் கள் அணி கம்பீரமாக அணிவகுத்தது. ரபேல் உட்பட 22 போர் விமா னங்கள், 11 சரக்கு விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தின. அதிநவீன போர் விமானங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற்றன. உள்நாட்டில் தயாரான பிரசந்த் ஹெலிகாப்டர் அனைவரது கவ னத்தையும் ஈர்த்தது. இது 16,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட பிரளயம் ஏவுகணையும் அணி வகுப்பில் பங்கேற்றது. இது மணிக்கு 2,000 கி.மீ. வேகத்தில் 500 கி.மீ. வரை சீறிப்பாயும் திறன்கொண்டது.  ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிர தேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட  15 மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. ஒன்றிய அரசின் 16 துறைகளைச் சேர்ந்த அலங்கார வாகனங்களும் அணிவகுப்பில் இடம் பெற்றன. சுமார் 5,000 கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்த சோராவர் பீரங்கியும், துர்கா-2 ரக லேசர் கருவி யும் அணிவகுப்பில் கவனத்தை ஈர்த்தது. பினாகா ஏவுகணைகள் கம்பீரமாக வலம் வந்தன. இது மணிக்கு 5,800 கி.மீ. வேகத்தில் சீறி பாயக்கூடியவை. நாக் ஏவுகணை, டி4எஸ் கவச வாகனம், டி-90 பீஷ்மா  பீரங்கி, ஆருத்ரா, சஞ்சய் ரேடார்கள்  உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களும் கவனத்தை ஈர்த்தன. குடியரசு தின நிகழ்ச்சியின்போது நடந்த அணிவகுப்பில் இந்தோ னேசியாவைச் சேர்ந்த ராணுவ  வீரர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை காண சுமார் 10,000  விருந்தினர்கள் அழைக்கப்பட்டி ருந்தனர். முன்னதாக தேசிய போர் நினை விடத்தில் பிரதமர் மோடி முப்படைத் தலைவர்களோடு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து மற்ற அதிகாரி கள் மரியாதை செலுத்தினர். 

சர்ச்சையைத் தவிர்க்க வேண்டிய குடியரசுத் தலைவர்!

“நமது நாட்டின் பல்லாயிரம் ஆண்டு பழமையான குடிமை  நற்பண்புகளால் இந்தியாவின் அரசி யலமைப்பு ஒரு வாழும் ஆவணமாக உயிர்ப்பு டன் உள்ளது”, என்று 76-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இந்திய குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.  நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி காட்டும் ஆவணத்தை உருவாக்கிய வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கும் மற்றும் அரசியல் நிர்ணய சபையின் இதர உறுப்பினர்களுக்கும் முர்மு  புகழாரம் சூட்டினார். இந்தியாவின் பயணத்தை நவீன குடியரசு என்ற வகையில் அதன் பாரம்பரியத்து டன் இணைத்த குடியரசுத் தலைவர் நீதி,  சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்பின் மதிப்புகள் எப்பொ ழுதுமே இந்திய நாகரீகத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகின்றன, சுதந்திரத்தின் போது இந்தியாவின் வாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு எழுந்த சந்தேகங்கள் தவறு  என்று அதன் உள்ளார்ந்த பலம் நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.  15 பெண்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் சமூகங்களில் இருந்து  இடம்பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட  அரசியல் நிர்ணய சபையின் பிரதிநிதித்து வத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார். பெண்களின் சமத்துவம் என்பது அன்றைய உலகின் பெரும்பாலான நாடுகளில் தொலைதூர லட்சியமாக இருந்த நிலையி லும் கூட இந்திய பெண்கள் தேசத்தின் தலை விதியை வடிவமைப்பதில் பங்களித்தார்கள் என்றும் குறிப்பிட்டார். 75 ஆண்டுகால முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் காலனித்துவ கால நினைவுச் சின்னங்களை கடந்து செல்லும் போது, குறிப்பாக காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களுக்கு மாறாக இந்திய நீதியியல் மரபுகளில் வேரூன்றிய மூன்று புதிய சட்டங்களை கொண்டு வந்த ஒன்றிய அரசின் துணிச்சல் மிக்க மகிழ்ச்சிகளையும் பாராட்டினார். நல்லாட்சியை மறுவறை செய்யும் வழிமுறையாக மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற சர்ச்சைக்குரிய திட்டத்தை ஜனாதிபதி தீவிரமாக ஆதரித்தார்.  நரேந்திர மோடி அரசினால் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரே நேரத்தில் தேர்தல் தொடர்பான வரைவு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன் விசாரணையில் உள்ள நிலையில், ‘தேசத்தின் நிலையான ஆட்சியை ஊக்குவிக்கும், கொள்கை முடக்கத்தை தடுக்கும், வளங்கள் திசைத்  திருப்புவதை தணிக்கும், நிதிச் சுமைகளை குறைக்கும்’ என்ற வாதத்துடன் ஜனாதிப தியும் ‘கோதாவில் ‘இறங்கினார்.  இது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரம்.  அரசியல் கட்டமைப்பை மீறுகிறது மற்றும் கூட்டாட்சியை ஊனப்படுத்துகிறது என்று  கூறி இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணியின் உறுப்புக் கட்சி களே கூட இதை எதிர்த்துள்ளனர். எதிர்க் கட்சிகளை சிறுமைப்படுத்துவதற்காகவே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை திணிப்ப தாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டுவதும் இயல்பானதே! ஜனாதிபதி இந்த தலைப்பை தவிர்த்திருக்கலாம். அடிப்படையில் ஒரு பாரபட்சமான அரசியல் விவகாரத்தில் நாட்டின் முதல் குடிமகன் தலையிடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் கவனமாக நடக்க வேண்டும். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ நாட்டின் வலிமைக்கு அழகு சேர்ப்பதாகும். இந்தியா வின் குடியரசு தினத்திலும் கூட அதை வலி யுறுத்துவது நம் முக்கிய கடமையாகும். ‘தி இந்து’ தலையங்கம் / 27.1.25 தமிழில்:கடலூர் சுகுமாரன்