states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடிய தால் இந்திய விமான நிறுவனங்களுக்கு மாதம் ரூ.306 கோடி கூடுதல் செலவாகிறது என் றும், அதற்கான இழப்பீடு வழங்கும்படி ஒன்றிய அரசிடம் விமான நிறுவனங்கள் மனு அளித்துள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்கு மத்தியில் கேதார்நாத் கோவில் (உத்தரகண்ட் இமயமலைச் சாரலில்) நடை வெள்ளிக்கிழமை அன்று திறக்கப்பட்டது.  

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரயில் புறப் படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யும் பொழுது அதற்கான தொகை திருப்பி வழங்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கா அதிவிரைவுச் சாலையில் வெள்ளிக்கிழமை அன்று ரபேல், மிராஜ், ஜாகுவார் போர் விமானங்களை இறக்கி விமானப்படை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நடிகர் விஜய் தேவரகொண்டா மீது காவல்துறையில் புகார்

பழங்குடியினரை அவமதித்த விவகாரம்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்பட அறிமுக விழா சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநி லம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூர்யாவின் தந்தை சிவகுமார், சூர்யா மற்றும் சிறப்பு  விருந்தினராக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டனர். இந்த விழாவில் விஜய் தேவர கொண்டா, “ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்  நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு  கண்டனத்தை தெரிவித்துக் கொள் கிறேன். காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்த மானது அங்குள்ள மக்கள் எங்களுடை யவர்கள். ஆனால் காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் 500 ஆண்டுகளுக்கு முன்பு  பழங்குடியின சமூகத்தினர்கள் மோதிக் கொண்ட சம்பவங்களை போன்றது” என  சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்நிலையில், விஜய் தேவர கொண்டாவின் பேச்சிற்கு தெலுங்கானா பழங்குடியின அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பழங்குடி யின மக்களை சுட்டிக்காட்டி பேசியது குறித்து ஹைதராபாத்தை சேர்ந்த லால் சவுகான் என்பவர் விஜய் தேவர கொண்டா மீது காவல்துறையில் புகார்  அளித்துள்ளார். புகார் குறித்து உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் உறுதி அளிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

 ரூ.21,000 கோடியை அள்ளிய இந்தியர்கள்

தற்போதைய நவீன உலகில் ஒரு வருமானம் மட்டும் போதாது  என்று அறிந்த பலரும், யூடியூப் (YouTube) சேனல்களை ஆரம்பித்து, அதன் மூலம் மற்றொரு வருவாயைப் பெறுகின்றனர். குறிப்பாக சிலர் யூடியூபை மட்டுமே முதன்மை வரு வாயாகக் கொண்டு, அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டு களில் இந்திய யூடியூபர்களுக்கு ரூ.21,000 கோடி அளித்துள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் கூறுகையில், “கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள யூடியூப் கலை ஞர்கள், படைப்பாளிகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 21,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தி யாவில் வீடியோ பதிவிடுவோர் மற்றும் ஊடக நிறுவனங்களை ஆதரிப்ப தற்கும், அவர்களின் வளர்ச்சியை விரிவு படுத்துவதற்கும் ரூ. 850 கோடிக்கும் மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள் ளோம்” என அவர் கூறினார்.