states

பிரதமர் இல்லம் அருகே உள்ள குடிசைகளை அகற்ற உத்தரவு 717 குடும்பங்கள் வீதிக்குச் செல்லும் அவல நிலை

பிரதமர் இல்லம் அருகே உள்ள குடிசைகளை அகற்ற உத்தரவு7 17 குடும்பங்கள் வீதிக்குச் செல்லும் அவல நிலை

புதுதில்லி பிரதமர் மோடியின் அதிகா ரப்பூர்வ இல்லம் தில்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ளது. இந்த பிரதமர் இல்லத்திற்கு அருகே உள்ள குடிசைப் பகுதிகளை அகற்றுவ தற்கு ஒன்றிய நில நிர்வாகத் துறை திடீரென உத்தரவு பிறப்பி த்துள்ளது. இந்த நடவடிக்கையினால் கடந்த பல தசாப்தங்களாக அங்கு வசித்து வந்த சுமார் 717 குடும்பங் கள் வீதிக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வெளி யேற்றப்பட உள்ள இந்தக் குடிசைப் பகுதிகளில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளே வசிக்கின்றனர். 717 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வுகள் நெருங்கும் வேளை யில் இந்த உத்தரவு வந்துள்ள தாகப் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இப்பகுதியைச் சுற்றியே தங்களது அன்றாட வேலைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு, திடீர் இடமாற்றம் பேரிடியாக அமைந்துள்ளது. பொதுமக்கள் - தர்ணா ஆனால் இதனை ஏற்க மறுத்த குடிசைவாசிகள்,”நாங்கள் கடந்த 30-40 ஆண்டுகளாக இங்குதான் வசித்து வருகிறோம். எங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை முதல் ஆதார் வரை அனைத்தும் உள்ளன. எங்களை இப்போது திடீ ரென காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே செல்வோம்?” எனக் கண்ணீருடன் கேள்வி எழுப்புகின்றனர்.  இந்த உத்தரவை எதிர்த்து நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், தர்ணா போராட்டத் தில் ஈடுபடவும் மக்கள் திட்டமிட் டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.