சோனியா, ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியா, '
நேஷனல் ஹெரால்டு மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் அயல்நாட்டு பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா, ராஜீவ் காந்தி அறக்கட்டளை யின் அறங்காவலர் சுமன் துபே உள்ளிட்ட 8 பேர் ரூ.5,000 கோடி மதிப்பி லான சொத்துக்களை அபகரிக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டதாக அம லாக்கத்துறை குற்றம்சாட்டியது. தொடர்ந்து ஏப்ரல் 15ஆம் தேதி தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஏப்ரல் 25ஆம் தேதி நடை பெற்ற விசாரணையில், அமலாக்கத் துறை ஆவணங்கள் திருப்தியாக இருக்கும் வரை காந்தி குடும்பத்தின ருக்கும், மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பும் உத்தரவை பிறப்பிக்க முடி யாது” என சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை அன்று விசார ணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, “இந்த வழக்கு தற்போது பரிசீலனையில் உள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வ தற்கு முன்பு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க இதன் நோட்டீஸ் மூலமாக சிறப்பு உரிமை உண்டு. நியாயமான விசார ணையை உறுதி செய்வதற்கு இது உதவும்” எனக் கூறி காங்கிரஸ் தலை வர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம் பிட்ரோடா என வழக்கில் சம்மந்தப் பட்ட 8 பேருக்கு நீதிபதி விஷால் கோக்னே நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், “அடுத்த விசாரணை மே 8ஆம் தேதி நடைபெறும் என்றும் குற்றம்சாட்டப் பட்டவர்கள், விசாரணை தொடர்பாக தங்கள் உரிமையைக் கோரலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.