111 ஆண்டுகளில் ஒரு குற்ற வழக்குகூட இல்லை
நாட்டில் குற்றச் சம்பவங்களின் கூடாரம் வட மாநிலங்கள் என கருதப்படும் நிலையில், கடந்த 111 ஆண்டுகளில் ஒரு குற்ற வழக்கு கூட பதிவாகாத கிராமம் ஒன்று பீகாரில் இருப் பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பீகாரின் மையப் பகுதியான கயா மாவட்டத்தில் பங்கட் என்ற ஒரு குக்கிரா மம் உள்ளது. 60 வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 111 ஆண்டு களாக காவல் நிலையத்தில் ஒரு வழக்கு கூட பதிவானது இல்லை. 1914ஆம் ஆண்டு வனப்பகுதியில் உருவான இந்த கிராமத்துக்கென சுய விதிகளை வகுத்து தலைமுறை தலைமுறையாக அதனை பின்பற்றியும் வருகின்றனர். ஊர் பிரச்சனை எல்லை கடந்து சென்று அமைதியை சீர்குலைக்க விரும்பாத இந்த கிராமத்தினர், ஒருமித்த கருத் தோடு வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து ஊர் பெரியவர் ராம்தேவ் யாதவ் (76) என்பவர் கூறுகையில், “பங்கட் கிராமத்தில் முதன்முதலில் குடி யேறிய மக்களே விதிகளை உருவாக்கி னர். இன்று வரை நாங்கள் அனைவரும் அதைப் பின்பற்றி வருகிறோம்’’ என்று கூறுகிறார்.