லாலுவுக்கு புதிய சம்மன்
பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான லாலு பிர சாத்துக்கு புதன்கிழமை அன்று (மார்ச் 19) விசாரணைக்கு ஆஜராகுமாறு அம லாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பாட்னாவில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மனில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வேலைக்கு நிலம் லஞ்சமாக வாங்கிய வழக்கில் லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் மீது கடந்த ஆண்டு தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் லாலுவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களின் மகள்கள் மிசா பாரதி, ஹேமா ஆகியோர் குற்ற வாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.