புதிய ஆதார் செயலி அறிமுகம்
காகித சேவைக்கு பதிலாக புதிய ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறி வித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில்,”ஆதார் சம்வாத் திட்டத்தின் மூன்றாவது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது முகத்தைக் கொண்டு செய்யறிவு (artificial intelligence) மூலமாக ஆதார் எண்ணை அடையா ளம் காண முடியும். இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் ஒருவர் எப்போதும் கையில் ஆதார் அட்டை அல்லது அதன் நகலை வைத்துக் கொண்டி ருக்கும் தேவையை இல்லாமல் ஆக்கிவிடும். இந்த புதிய ஆதார் செயலியானது தற்போது பீட்டா பரிசோதனையில் இருப்பதாகவும், செயலி பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், முழு ஆதார் அட்டை விவரங்களையும் ஒருவருக்குப் பகிர்வ தற்கு பதிலாக, தேவையான விவரங்களை மட்டும் பகிரும் வாய்ப்பும் கிடைக்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது.