தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்எல்ஏ ரோகித் பவார்
மகாராஷ்டிராவில் அதிகாரப்போட்டி மேலும் சுவாரஸ்யமாக இருக்க 3 முதலமைச்சர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும். மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை விட பதவிக்கே போட்டி நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்
அதானி மீது அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் வைத்திருக்கும் புகாரை, அதானியிடமே இந்திய அரசு அளிக்கும்படி அந்த அமைப்பு கேட்டிருக்கிறது. இதனை செய்து கொடுப்பாரா மோடி?
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
உத்தரப்பிரதேச பாஜக அரசு முறையாக எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. நெரிசலில் சிக்கி பலர் பலியாகியும் அரசு தனது தவறை உணரவில்லை. தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கையை ஒன்றிய அரசு மறைக்கிறது. இது மகா கும்பமேளா அல்ல, மரண கும்பமேளா?
சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்
கும்பமேளா விபத்தால் உத்தரப்பிரதேச முதல மைச்சர் ஆதித்யநாத் கலக்கம் அடைந்துள்ளார். அதனால் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்று அவரால் யோசிக்க முடியவில்லை. ஒரு துறவி எப்படி இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு நேர்மாறான சிந்தனை உள்ளது. அதனால் தான் அவர் உளறுகிறார்.