இந்துத்துவா குண்டர்கள் தாக்குதலில் முஸ்லிம் இளைஞர் உயிரிழப்பு
ஜெய்ப்பூர் பசுப் பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்கள், கால்நடைகளை ஏற்றிச் செல்பவர் களை வழிமறித்து பணம் பறிக்கவும் மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலும் தொட ர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். மோடி பிரதமர் ஆன பின்பு இந்நிகழ்வுகள் அதிகரிக்க துவங்கின. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகள் போலாயின. இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி அருகே சாரே கலா கிராமத்தில் கால்நடைகளை லாரியில் ஏற்றிச் சென்றவர்களை வழிமறித்து பசுக்குண்டர்கள் பணம் பறிக்க முயன்றனர். பணம் கொடுக்க வில்லை என்றால், சட்டவிரோதமாக கால்நடை களை கடத்துவதாக கூறி கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். தொடர்ந்து பசு குண்டர்களுக்கும், கால்நடைகளை ஏற்றிச் சென்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பசுக்குண்டர்கள் நடத்திய தாக்குதலில் ஆமிர் (28) என்ற முஸ்லிம் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆமிர் ஹரியானா மாநிலம் பால்வால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்குத் திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.