மேலும் ரூ.63,000 கோடியில் ரபேல் விமானங்களை வாங்கும் மோடி அரசு
சர்ச்சைக்குரிய வகையில் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு ரூ.58,891 கோடி செலவில் 36 ரபேல் ஜெட் விமானங்களை மோடி அரசு வாங்கியது. இந்த விமான கொள்முதல் விவகாரத்தில் பிரம்மாண்ட ஊழல் நடந்து இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதே போல பிரான்ஸ் நாட்டு ஊடகங்களும் ரபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்த தாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இந்த விவகாரம் உச்சநீதி மன்றம் வரை சென்றாலும், மோடி அரசு ஊழலை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், இந்திய கடற்படைக் காக 26 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சர வைக் குழு செவ்வாய்க்கிழமை அன்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொத்தம் ரூ.63,000 கோடி மதிப்பில் 22 ஒற்றை இருக்கை ரபேல் கடற்படை விமானங்கள் மற்றும் 4 இரண்டு இருக்கை ரபேல் கடற்படை விமானங்கள் கொள் முதல் செய்யப்படவுள்ளன.
இதில் 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்பட வுள்ளன. ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதி யில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தி யாவிடம் 26 விமானங்களும் ஒப்ப டைக்கப்படும் என கூடுதல் தகவல் வெளி யாகியுள்ளன. ஏப்ரல் மாத இறுதியில் பிரான்ஸ் பாது காப்புத் துறை அமைச்சர் செபாஸ்டி யன் லெகோர்னு இந்தியா வருகை தர வுள்ளார். அப்போது இரு நாடுகளுக்கி டையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்ச கம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.