குருத்வாரா சட்ட திருத்தம் மூலம் சீக்கியர்களையும் ஒடுக்க மோடி அரசு திட்டம்
காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், சீக்கிய அறிஞர்கள் எச்சரிக்கை
கடந்த வாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்ட வக்பு வாரிய மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புத லுக்குப் பின் சட்டமாக மாற்றப் பட்டது. இந்த வக்பு திருத்த சட்டம் முஸ்லிம்களிடமிருந்து கடுமை யான எதிர்ப்பை ஈர்த்துள்ளது மட்டு மல்லாமல், சீக்கிய சமூகத்தினரி டையேயும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. மோடி பிரதமர் ஆன பின்பு ஒன்றிய அரசு ஒரு மதத்தை பல வீனப்படுத்தி மற்றொன்றை வலுப் படுத்தவே அனைத்து முயற்சியை யும் மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி தான் முஸ்லிம் சமூகத்தி னருக்கு எதிரான வக்பு வாரிய சட்டம் ஆகும். இதே செயல்முறை யை பயன்படுத்தி பின்னாளில் மோடி அரசு சீக்கிய குருத்வாரா சட்டம் 1925-யும் திருத்தலாம் என காங்கி ரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன.
உத்தரப்பிரதேச தேர்தலுக்காக...
இதுதொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலை வருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் எம்.பி., கூறுகையில்,”பாஜக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் துருவமுனைப்பைச் சுற்றியே அரசியல் சுழலும் ஒரு கட்சி. அதே போன்று பாஜகவின் முழு அரசிய லும் பாகிஸ்தான், முஸ்லிம் மற்றும் காலிஸ்தானைச் சார்ந்திருக்கிறது. வக்பு வாரிய சட்ட திருத்தம் பின்னால் உள்ள அரசியல் என்ன வென்று நான் யோசித்துக் கொண்டி ருந்தேன். பின்னர் வக்பு சொத்து மேலாண்மை ஆவணத்தைப் பெற்றேன். அதில் வக்பு சொத்தில் அதிகபட்ச பங்கு 27% உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இருப்பதைக் கண்டறிந்தேன். மேலும் உத் தரப்பிரதேசத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காகவே மோடி அரசு வக்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், லூதியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,யுமான அமரீந்தர் சிங் ராஜா வாரிங் கூறுகையில்,”முஸ்லிம்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை. அதனால் அவர்களை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்துகிறார்கள். இது தான் வக்பு வாரிய சட்டம் ஆகும். வக்பு வாரிய சட்டம் மூலம் முஸ்லிம்கள் தங்கள் முன் சரண டைவார்கள் என்று பாஜக நினைக்கி றது. ஆனால் இது மோசமான சிக்கலை ஏற்படுத்தும். முஸ்லிம்க ளிடம் நடந்து கொள்வதை போல வே பஞ்சாப்பில் உள்ள விவசாயி களிடமும் மோடி அரசு நடந்து கொள்கிறது. இன்று வக்பு வாரிய சட்டம் என்றால், நாளை சீக்கிய குருத்வாரா சட்டம், 1925இல் ஒரு திருத்தத்தைக் கூட மோடி அரசு கொண்டுவரும். இதை நடக்க விட மாட்டோம்” என அவர் கூறினார். மக்களை .
திசைதிருப்பும் முயற்சி “
இது ஒரு மதத்தை அழிக்க மற்றொன்றைக் காப்பாற்றும் முயற்சி” என பஞ்சாப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பால்கர் சிங் கூறி யுள்ளார். அதே போன்று அமிர்தசர ஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறி வியல் துறையின் முன்னாள் தலை வரும், பிரபல அறிஞருமான ஜக்ரூப் சிங் சேகோன்,”அரசியல் அல்லது முடிவெடுப்பதில், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு மற்றும் விகிதாசாரமற்றது. வேலை வாய்ப்பு, பணவீக்கம் போன்ற உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் முயற்சியே வக்பு சட்டம் ஆகும்” என மோடி அரசுக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளார்.