கொல்கத்தாவில் பொம்மையாக்கப்பட்ட மெஸ்ஸி விளையாட்டுச் சாதனையல்ல, இது விஐபிகளின் அதிகாரப் போராட்டம்!
கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் லியோனல் மெஸ்ஸி யின் கொல்கத்தா வருகை (2025 டிசம்பர் 13) என் பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க விளையாட்டுத் திருவிழாவாக அமைந்தி ருக்க வேண் டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பேரா சைக்கும், நிர்வாகச் சீர்கேட்டிற்கும் ஒரு மிகச் சிறந்த உதாரணமாக முடிந்துவிட்டது. ஒரு சர்வ தேச வாய்ப்பை எப்படித் தங்களின் சுய நலத்திற்காகச் சிதைக்க முடியும் என்பதை மேற்கு வங்க அரசாங்கமும் அதன் அதிகாரி களும் உலகிற்கே பறைசாற்றியுள்ளனர். மக்களின் பணம்... அமைச்சர்களின் ‘செல்பி’ மோகம்! அரசாங்கம் என்பது மக்களுக்குச் சேவை செய்யவே இருக்கிறது என்று நாம் நம்பு கிறோம். ஆனால், மெஸ்ஸியின் வருகை யின்போது அந்த விதி தலைகீழாக மாறியது. மெஸ்ஸியை ஒரு நிமிடம் காண வேண்டும் என்பதற்காகத் தங்களின் சேமிப்பைச் செலவ ழித்தும், கடன் வாங்கியும் 20,000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய 80,000 ரசிகர் களை மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு வஞ்சித்தது. ரசிகர்கள் செலுத்திய அந்தப் பணம், மெஸ்ஸியைப் பார்ப்பதற்காக அல்ல; மாறாக அமைச்சர்கள், அவர்களின் உற வினர்கள் மற்றும் அடியாட்கள் மெஸ்ஸியுடன் ‘செல்பி’ எடுத்துக்கொள்வதற்கான கட்டண மாக மாறியது. உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரரை, ஒரு புகைப்படக் கூடாரத்தின் பொம்மையைப் போல மாற்றி, அமைச்சர்களின் ‘இன்ஸ்டா கிராம்’ மோகத்திற்குத் தீனி போட்டது மாநில அரசு நிர்வாகம். மைதானத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்குத் தெரிந் தது மெஸ்ஸி அல்ல, மாறாக அமைச்சர்களின் முதுகுகள் மட்டுமே! நிர்வாகக் குளறுபடிகளும் பாதுகாப்புத் தோல்வியும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினர், அமைச்சர்களின் குடும் பத்தினருக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும், அவர்களை மெஸ்ஸியிடம் அழைத்துச் செல்வ திலுமே குறியாக இருந்தனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், ஏமாற்ற மடைந்த ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். மைதானத்தின் உள்கட்டமைப்புகள் சேதம டைந்தன. ஒரு சர்வதேச நட்சத்திரத்தை அவ ரது ரசிகர்களிடமிருந்து பாதுகாப்பதற்குப் பதில், ரசிகர்களை அமைச்சர்களின் அராஜ கத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இப்போது, தவறு செய்த அதி காரிகள் மீது விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடக்கிறது. இழந்த பணத்தைத் திரும் பப் பெறுவதற்குள் ரசிகர்கள் பல மாதங்கள் அதிகாரத்துவச் சிவப்பு நாடாக்களில் சிக்கி அலைய வேண்டியிருக்கும். சர்வதேச அளவில் நேர்ந்த அவமானம் இந்த ஒரு நாள் நிகழ்வு, கொல்கத்தாவின் விளையாட்டுப் புகழைச் சர்வதேச அளவில் அதலபாதாளத்திற்குத் தள்ளிவிட்டது. கொல் கத்தா என்பது கால்பந்தாட்டத்தின் இதயம் என்று சொல்லப்பட்ட காலம் போய், ஊழலும் குழப்பமும் நிறைந்த ஒரு நகரம் என்ற சித்திரம் உலக ஊடகங்களில் பரவியது. இனிவரும் காலங்களில் சர்வதேச நட்சத்திரங்களோ அல் லது சர்வதேச கிரிக்கெட் வாரியம் (பிபா) போன்ற அமைப்புகளோ கொல்கத்தாவை ஒரு விளையாட்டு மையமாகத் தேர்வு செய்யப் பலமுறை தயங்குவார்கள். இது கொல்கத்தாவின் சுற்றுலா மற்றும் பொருளா தாரத்திற்குப் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். மறக்க முடியாத மாரடோனா வருகை இதற்கு நேர்மாறாக, 2008இல் மாரடோனா (அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பாவான்) கொல்கத்தா வந்தபோது இதே நகரம் எவ்வ ளவு கண்ணியமாகச் செயல்பட்டது என்பதை நாம் நினைவு கூர வேண்டும். அப்போது அர சாங்கம் ஒரு துணையாக இருந்ததே தவிர, குறுக்கீடாக இருக்கவில்லை. மாரடோனா சால்ட் லேக் மைதானம் முதல் மோகன் பாகன் கிளப் வரை பல இடங்களுக்குச் சென்றார். அன்னை தெரசாவின் இல்லத்திற்குச் சென் றார்; தோழர் ஜோதி பாசுவைச் சந்தித்தார். ஐந்து வெவ்வேறு இடங்களில் லட்சக்கணக் கான மக்கள் திரண்டிருந்தும், எங்கும் சிறு குழப்பம் கூட நேரவில்லை. அதுதான் மேற்கு வங்கத்தின் உண்மையான கால்பந்து கலாச்சாரம். 2011இன் பிபா நட்பு ரீதியான போட்டி 2011இல் இந்தியா நடத்திய முதல் பிபா நட்பு ரீதியான போட்டி கொல்கத்தாவில் நடை பெற்றது. அர்ஜெண்டினா மற்றும் வெனிசுலா அணிகள் மோதிய அந்தப் போட்டியில் மெஸ்ஸி, டி மரியா, அகுவெரோ போன்ற நட் சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு தனி யார் நிறுவனம் அந்தப் போட்டியைச் சிறப்பாக ஒருங்கிணைத்தது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தும், எவ்வித விஐபி கலாச்சாரமும் இன்றி விளையாட்டு வீரர் களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு அற்புதமான அனுபவம் வழங்கப்பட்டது. அதுதான் கொல் கத்தாவின் நிர்வாகத் திறமைக்கான சாட்சி. நான்கு தசாப்த கால ஜாம்பவான்கள் கொல்கத்தா மைதானங்கள் 1977இல் கால்பந்து சக்கரவர்த்தி பீலே முதல் சாக்ர டீஸ், ஆலிவர் கான், ரொனால்டோ (R9), ரொமாரியோ, டியாகோ போர்லான் போன்ற எண்ணற்ற உலக மகா வீரர்களைக் கண்டுள் ளது. இந்த வீரர்கள் ஆடிய ஆட்டமும், அவர்கள் பந்தைத் தொட்ட தருணங்களும் இன்றும் வங் கத்து ரசிகர்களின் இதயங்களில் பசுமையாக உள்ளன. ஆனால், இன்று ஒரு ‘செல்பி’ பேராசையினால் அந்தப் பெருமைமிகு வரலாறு களங்கப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் நாடகமும் அமைச்சரின் ராஜினாமாவும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்த பிறகு, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இப்போது மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சரின் (அரூப் பிஸ்வாஸ்) ராஜினாமா நாடகம் அரங்கேறுகிறது. ஆனால், அமைச்ச ரின் ஒரு ராஜினாமா கடிதம் ஒட்டுமொத்த அர சாங்கத்தின் தோல்வியை மறைத்துவிட முடி யாது. முதலமைச்சர் (மம்தா பானர்ஜி) மற்றும் விளையாட்டு அமைச்சரின் குடும்பத்தி னருக்கு மெஸ்ஸியைச் சுற்றி வளைத்துக் கொண்டு மற்றவர்களின் பார்வையை மறைக்க என்ன உரிமை இருக்கிறது? தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் உட்பட பல அமைச்சர்கள் இந்த அராஜகத்தில் பங்கெடுத்தனர். மீட்கப்பட வேண்டிய வங்கத்து விளையாட்டுப் பண்பாடு இந்தத் தோல்விக்குக் காரணம் வங்கத்து ரசிகர்களின் ஒழுக்கமின்மை அல்ல; மாறாக, அமைச்சர்களின் ஆணவமும் நிர்வாகத்தின் சுயநலமுமே ஆகும். சர்வதேச தரம் வாய்ந்த பாதுகாப்பு மற்றும் விஐபி கலாச்சாரமற்ற விளையாட்டுச் சூழலை உறுதி செய்யாத வரை, கொல்கத்தா மைதானத்தின் கதவுகள் உலகத் தரத்திலான போட்டிகளுக்குத் திறக் கப்படப் போவதில்லை. விளையாட்டு என்பது அரசியல்வாதிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் மேடை அல்ல. அது ரசிகர்களின் உணர்வு, வீரர்களின் உழைப்பு. கொல்கத்தாவின் விளையாட்டுப் புகழை மீட்டெடுக்க வேண்டு மானால், இத்தகைய விஐபி பேராசை மைதா னங்களிலிருந்து முற்றிலுமாகத் துடைத்தெ றியப்பட வேண்டும். வங்காளத்தின் கால் பந்து ஆன்மா அமைச்சர்களின் செல்பியில் இல்லை, அது மைதானத்தில் விளையாடும் வீரர்களின் காலடியிலும், கேலரியில் அமர்ந்தி ருக்கும் ரசிகர்களின் உற்சாகத்திலுமே உள்ளது. -சமிக் லஹிரி, பீப்பிள்ஸ் டெமாக்ரஸி (டிசம்பர் 21)
