வினாத்தாளில் ஆர்எஸ்எஸ் பற்றி கூறியது தேசத் துரோகமாம்!
பேராசிரியரை பணிநீக்கம் செய்த உ.பி.,பாஜக அரசு
பாஜக ஆளும் உத்தரப்பிர தேசம் மாநிலம் மீரட் டில் உள்ளது பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் (சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழ கம்). அரசு நிறுவனமான இந்த பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற பருவத் தேர்வில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா கோட்பாடுகளுக்கு எதிராக வினாத்தாள் தயாரித்ததாக தேசத் துரோக குற்றச்சாட்டுடன் சீமா பன்வார் என்ற பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிசியுஎஸ்யூவின் இணைப்புக் கல்லூரிகளில் ஏப்ரல் 2 அன்று நடைபெற்ற எம்.ஏ., அரசியல் அறிவியல் இறுதி ஆண்டு தேர்வின் 87ஆவது கேள்வியில்,”எது சமூகத்தில் இருந்து அனோமிக் குழுக்களாக (சமூகத்தில் இருந்து அரசியல் அமைப்பில் தன்னிச்சை யாக ஊடுருவல்) கருதப்படு கின்றது என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கான விருப்பங்க ளில் “தல் கல்சா (சீக்கிய இராணு வம்), நக்சலைட் குழுக்கள், ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்)” ஆகியவை அடங்கியிருந்தன. அதே போல 93ஆவது கேள்வி யில் பொருத்தும் வினா அடிப்ப டையில் கேட்கப்பட்டது. இந்த கேள்வியில் ஆர்எஸ்எஸ்-ஸை மத மற்றும் சாதி அடையாள அர சியலின் எழுச்சியுடன் இணைக்கப் பட்டுள்ளது. மற்ற விருப்பங்களில் பிஎஸ்பியை (பகுஜன் சமாஜ்) தலித் அரசியலுடனும், மண்டல் கமிஷனை ஓபிசி அரசியலுடனும், சிவசேனாவை பிராந்திய அடை யாள அரசியலுடனும் இணைக்கப் பட்டுள்ளன. 93ஆவது கேள்வியில்... A.பின்தங்கிய அரசியலின் எழுச்சி B. தலித் அரசியலின் எழுச்சி C. மத மற்றும் சாதி அடையாள அரசியலின் எழுச்சி D.பிராந்திய அடையாள அரசிய லின் எழுச்சி 1. சிவசேனா 2. ஆர்எஸ்எஸ் 3. பிஎஸ்பி 4. மண்டல் கமிஷன் இந்த கேள்விக்கு சரியான பதில் : Aக்கு 4 சரியான விடை, Bக்கு 3 சரியான விடை, C க்கு 2 சரி யான விடை, Dக்கு 1 சரியான விடை ஆகும். பணிநீக்கம் உடனே ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி,”எம்.ஏ., அரசியல் அறிவி யல் இறுதி ஆண்டு தேர்வு வினாத் தாளில் ஆர்எஸ்எஸ்-ஸை மத மற்றும் சாதி அரசியலின் தோற் றத்திற்கான காரணம் என கூறப் பட்டுள்ளது. இது தேசத் துரோகச் செயல்” என குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுக்குப் பின்னர் அடுத்த சில மணிநேரங்க ளில் உத்தரப்பிரதேச பாஜக அரசு வினாத்தாள் தயாரிப்புக் குழுவின் தலைவரான பேராசிரியர் சீமா பன் வாரை பணிநீக்கம் செய்துள்ளது. ஆனால் சீமா பன்வார் பணிநீக்கம் செய்யப்படவில்லை. அவர் வாழ் நாள் முழுவதும் வினாத்தாள் தயா ரிப்பதில் இருந்து தடை செய்யப் பட்டுள்ளார் என மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. 5 நாட்களுக்கு முன்னரே சீமா கல்லூரிக்கு நுழைய தடை விதித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது பணிநீக்கம் செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.