ஒளரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில் பெரும் வன்முறை
2 வாரங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ அபு அசிம் ஆஸ்மி முகலாய மன்னர் ஒளரங்கசீப்பை புகழ்ந்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும் பாஜக கூட்டணி எம்எல்ஏக்கள் அவரை இடைநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாய கர் அபு அசிமை இடைநீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒளரங்கசீப்பின் கல்லறையை அப்புறப் படுத்த வேண்டும் என சதாரா தொகுதி பாஜ எம்.பி.,யும், சத்ரபதி சிவாஜியின் வாரிசுமான உதயன்ராஜே போஸ்லே கோரிக்கை விடுத்தார். இவரது பேச்சுக்கு பிறகு விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள், “ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும்” என மாநி லம் முழுவதும் போராட்டங்களை நடத்தத் தொடங்கின. வன்முறை களமான நாக்பூர் இந்த போராட்டத்தின் போது சில இடங்க ளில் இந்துத்துவா குண்டர்கள் ஒளரங்கசீப்பின் படத்தை எரித்தனர். மேலும் விஷ்வ இந்து பரிஷத் முதலமைச்சர் பட்னாவிஸ்க்கு விடுத் துள்ள அறிக்கையில்,”ஒளரங்கசீப்பின் கல்ல றையை அரசு இடிக்க வேண்டும். இல்லாவிட் டால் நாங்களே பாபர் மசூதியை போன்று அத னை இடித்து தள்ளுவோம்” என கூறியது. திங்கள்கிழமை அன்று மாலை நாக்பூரின் மஹால் பகுதியில் உள்ள சிவாஜி சிலை அருகே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள குண்டர்கள் என 250க்கும் மேற்பட்டோர் ஒளரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் எனக் கோரி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஒளரங்கசீப்பின் உருவப்படம் கொண்ட போஸ்டர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித நூல் “திருகுரான்” எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதன் எதிரொலியாக சுமார் இரவு 7.30 மணியளவில் நாக்பூர் அருகே பல்தர்புராவில் இந்து - முஸ்லிம் என இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் கடைகள் சூறை யாடப்பட்டன. வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டு, தீ வைக்கப்பட்டன. அதிரடி படையினர் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையில் 9 பேர் பலத்த காய மடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிரடிப் படை யினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். நாக்பூரில் ஊரடங்கு இந்நிலையில், அமைதியை உறுதி செய்யும் வகையில் சட்டப்பிரிவு பிஎன்எஸ் 163இன் கீழ் (முன்பு 144) நாக்பூரின் பெரும் பாலான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்திர குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாக்பூரின் 12 காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மறு உத் தரவு வரும்வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்” என அவர் கூறினார்.