states

img

மோடி அரசின் செயலால் விரக்தியுற்ற மனு பாக்கரின் தந்தை

இந்திய விளையாட்டுத் துறையில் மிக உய ரிய விருதாகக் கரு தப்படும் தயான் சந்த் கேல் ரத்னா விருதின் 2024ஆம் ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியலில் பாரீஸ் ஒலிம்  பிக்கில் இரண்டு பதக்கங்கள்  (வெண்கலம் - துப்பாக்கிச் சுடுதல்) வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மனு பாக்  கரின் (22) பெயர் இடம்பெற வில்லை. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் மனு  பாக்கருக்கு ஏன் கேல் ரத்னா  விருது வழங்கவில்லை? என  கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மோடி அரசு அலட்சியப் பதில்

“மனு பாக்கர் விண்ணப் பிக்கவில்லை; அதனால் தான் கேல் ரத்னா விருதுக்  கான பரிந்துரைப் பட்டியலில்  அவரது பெயர் இடம்பெற வில்லை” என ஒன்றிய விளை யாட்டுத்துறை அமைச்சகம் அலட்சியமாகக் கூறியது.  “நாங்கள் விண்ணப்பித் தோம் ; ஆனால் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை” என மனு  பாக்கர் குடும்பம் கூறியுள் ளது.  இந்நிலையில், உங்கள்  குழந்தைகளை விளை யாட்டில் ஈடுபடுத்த வேண் டாம் என மனு பாக்கரின் தந்தை  ராம் கிஷன் பாக்கர்  வேண்டுகோள் விடுத்துள் ளார். இதுகுறித்து அவர் மேலும்  கூறுகையில், ”பெற்றோர்  களே, உங்கள் குழந்தை களை விளையாட்டில் ஈடு படுத்தாதீர்கள். பணம் தேவைப்பட்டால் கிரிக் கெட்டில் ஈடுபடுத்துங்கள். அதிகாரம் தேவைப்பட்டால் அவர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக்குங்கள். ஒருபோதும் விளையாட்டில் ஈடுபடுத்த  வேண்டாம்” என எச்சரிக்கை யுடன் வேண்டுகோள் விடுத் துள்ளார். ராம் கிஷன் பாக்க ரின் பேச்சு சமூக வலைத்  தளங்களில் டாப் டிரெண்டிங்  கில் வைரலாகி வருகிறது.

மோடிக்கு ஷூட்டிங் மட்டும் முக்கியம் 

பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவுடன் பிரதமர் மோடி மனு பாக்கருக்கு போன் கால் செய்து வாழ்த்து தெரிவித்தார். இதனை ஒரு திரைப்பட ஷூட்டிங் நிகழ்வாக “கோடி மீடியா” ஊடகங்கள் தலைப்புச் செய்தி யாக ஒளிபரப்பியது. ஆனால்,”கேல் ரத்னா விருதுக்கு மனு  பாக்கர் விண்ணப்பிக்கவில்லை ; அதனால் தான் விருது பரிந்துரை பட்டியலில் இல்லை” என மோடி அரசு  அலட்சியமாகக் கூறுகிறது. இதன்மூலம் அரசியல் ஆதா யத்திற்காக தன்னை முதன்மைப்படுத்தவே பிரதமர் மோடி மனு பாக்கருக்கு போன் கால் செய்து ஷூட்டிங்கை நிகழ்த்தியுள்ளார். மற்றபடி விளையாட்டு வீரர்களின் நலன் தொடர்பாக மோடிக்கு எந்தவித அக்கறையும் இல்லை  என்பது நிரூபணமாகியுள்ளது.

அரசியலுக்காக ராஜீவ் காந்தி பெயர் நீக்கம்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற பெயரில் இருந்த விருதை, கடந்த 2021ஆம் ஆண்டு தயான்  சந்த் கேல் ரத்னா விருது என மாற்றியது  மோடி அரசு. காரணம் காங்கிரஸ் கட்சி யின் மீது உள்ள அரசியல் வெறுப்பே. அதனால் தான் விருதில் இருந்த ராஜீவ்  காந்தி பெயர் நீக்கப்பட்டது. மற்றபடி விருது தேர்வில் எந்த மாற்றமும் செய்யப்  படவில்லை; விதிகள் மட்டுப்படுத்தப்பட் டுள்ளன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விளையாட்டில் முத்திரை பதிக்கும் வீரர் - வீராங்கனைகளின் செயல்  பாடு மற்றும் நலன்களை தனி கவனம் எடுத்துக் கொண்டு விருது வழங்கி கவுர வித்தது. இதனால் அப்போதைய கால கட்டத்தில் கேல் ரத்னா தொடர்பாக பெரி தாக சர்ச்சை எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது மோடி அரசு இந்துத்  துவா நிகழ்ச்சி நிரலில் மட்டுமே குறியாக  உள்ளது. விளையாட்டு வீரர் - வீராங்  கனைகளின் நலன் பற்றி யோசிப்பது இல்லை. இதன் காரணமாகவே மனு  பாக்கர் விவகாரத்தில் சர்ச்சை வெடித் துள்ளது.   மோடி அரசுக்கு பயிற்சியாளர் அறிவுரை கேல் ரத்னா விருது பரிந்துரை நிகழ்வில் பல்வேறு சர்ச்சை வெடித்து வரு வதால் புள்ளிகள் கொடுக்கும் அமைப்பை  உருவாக்க வேண்டும் என  மனு பாக்க ரின் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஒரு விளையாட்டு வீர ருக்கு புள்ளிகள் கொடுக்கும் அமைப்பு இருக்க வேண்டும். விருதுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என எல்லா  விளையாட்டு வீரர்களுக்கும் தெரியுமா? ஏன் விளையாட்டு அமைப்பு அவர் களுக்காக விண்ணப்பிக்கக் கூடாது?” என  மோடி அரசுக்கு எதிராக கடும் கண்ட னம் தெரிவித்து, அறிவுரை கூறியுள்ளார்.