பாலியல் ஜோதிடருடன் தொடர்பு மகா., மகளிர் ஆணையத் தலைவர் ராஜினாமா
பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலம் நாசிக் கைச் சேர்ந்த “கேப்டன்” என்று அழைக்கப் படும் ஜோதிடர் அசோக் கராத் என்ப வர் பாலியல் வன் கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டார். 58க்கும் மேற்பட்ட பெண்களை பாலி யல் ரீதியாக துஷ்பிர யோகம் செய்து, அவற்றை ரகசிய கேமராக்கள் மூலம் படம்பிடித்ததாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளி யாகின. எதிர்க்கட்சிகள் இதனை மகா ராஷ்டிராவின் “எப்ஸ்டீன் கோப்புகள்” என்று விமர்சித்தன. இந்நிலையில், பாலியல் ஜோதிடருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகான்கர் (தேசியவாத காங்கி ரஸ் (அஜித்) கட்சி) தனது பதவியை ராஜி னாமா செய்தார். ரூபாலி சகான்கர் அந்த ஜோதிடருக்குக் குடை பிடிப்பது, அவரது கால்களைக் கழுவி “பாத பூஜை” செய்வது மற்றும் அவரைத் தனது குரு எனப் புகழ்ந்து பேசும் பழைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.
