states

img

மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21ஆம்  தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேசன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்கக் கோரி “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் மக்க ளவை, மாநிலங்களவை என இரு  அவைகளிலும் கிளர்ச்சியில் ஈடுபட்டு  வந்தனர். இதையடுத்து நாடாளு மன்றத்தில் ஆபரேசன் சிந்தூர், பஹல்  ஹாம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. ஆனால் பீகார் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதிக்க விடுத்த கோரிக் கையை மோடி அரசு நிராகரித்து வரு கிறது. இந்நிலையில், 2 நாள் விடு முறைக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்களன்று காலை  11 மணிக்கு கூடின. அவை கூடியதும்  பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்  தம் தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்க ளவையில் “இந்தியா” கூட்டணி எம்.பி., க்கள் கிளர்ச்சி போராட்டம் நடத்தினர். இத னால், மக்களவை மதியம் 2 மணி வரை  மற்றும் அதன்பிறகு நாள்முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அதேவேளையில் மாநி லங்களவை அவை கூடியதும், ஜார்க் கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் மறைவிற்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து மாநிலங்கள வையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது.