states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ்'

கேரளாவைப் போல தமிழ் நாட்டிலும் தற்போது குப்பை இல்லா திட்டம் (குப்பை இல்லா புதிய கேரளம்) உருவாக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் குப்பை மேலாண்மை முறை தற்போது தேசிய கவனத்தை ஈர்க்கிறது.

முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி

தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியாவில் மாநில சுயாட்சி கோரிக்கைக்கான புதிய பாதையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய மிக முக்கியமான தீர்ப்பு இது. இந்த தீர்ப்பிற்கு பிறகாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும். அது தான் அவருக்கு நல்லது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

மசோதாக்களை ஆளுநர்கள் காலவரை யின்றி நிறுத்தி வைக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகம், கூட்டாட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். மக்களால் தேர்வான அரசுக்கு இடையூறு செய்ய ஆளுநர்களை பாஜக அரசு பயன் படுத்தியதை தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது

முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள கருத்துகளை கூர்ந்து கவனித்தால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது தெளிவுபடுகிறது. இல்லையென்றால் ஒன்றிய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.