states

வேலை பாதுகாப்பு, பாலின சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு 3 மாதங்களில் கேரள திரைப்படக் கொள்கை

வேலை பாதுகாப்பு, பாலின சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு 3 மாதங்களில் கேரள திரைப்படக் கொள்கை

திரைத்துறை மாநாட்டில் அமைச்சர் சஜி செரியன் உறுதி

மலையாள திரைப்படத் துறை யில் வேலை பாதுகாப்பு, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வ தன் மூலம் உலகத் தரத்திற்கு உயர்த்து வதற்கான பரிந்துரைகளுடன் திரைப்  பட மாநாடு (கான்கிளேவ்) நிறைவ டைந்தது. மூன்று மாதங்களில் கேரள  திரைப்படக் கொள்கை அறிவிக்கப் படும் என அமைச்சர் சஜி செரியன் தெரிவித்தார். லைட்பாய் முதல் இயக்குனர் வரை திரைத்துறையில் பணியாற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இரண்டு நாட்கள் விரிவான விவாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் கருத்துக்கள் மற் றும் பரிந்துரைகளை அமைச்சர் சஜி  செரியன் சுட்டிக்காட்டினார். அனை த்து அம்சங்களிலும் பாகுபாடற்ற நடத்தை மற்றும் வேலையை உறுதி செய்வதையும், தவறுகளுக்கு எதி ராக கடுமையான நடவடிக்கை எடுப்ப தையும் கொள்கை உறுதி செய்யும் என்று தெளிவுபடுத்தினார். அரசாங்கம் மூன்று மாதங்களுக் குள் கொள்கையை அறிவிக்கும். மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட யோச னைகள் மற்றும் பரிந்துரைகள் மூன்று  நாட்களுக்குள் திரைப்பட மேம் பாட்டுக் கழகம் மற்றும் திரைப்பட  அகாடமியின் இணையதளத்தில் வெளியிடப்படும். பொதுமக்கள் 15  நாட்களுக்குள் தங்கள் கருத்துக்க ளைத் தெரிவிக்கலாம். அவற்றை நிபு ணர் குழு ஆய்வு செய்த பிறகு வரை வுக் கொள்கை தயாரிக்கப்படும். ஜூனியர் கலைஞர்களுக்கு ஒப்  பந்த ஊதியம், உணவு மற்றும் வேலைக்கான அடிப்படை வசதிகள்  உறுதி செய்யப்படும். திரைப்படத் தயாரிப்பு தொடர்பான அனுமதி களுக்கு ஒற்றைச் சாளர அமைப்பு  நிறுவப்படும். திரைப்படத்துறையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.  திரைப்படம் மற்றும் தொலைக் காட்சித் துறையையும் உள்ளடக்கிய கொள்கை மற்றும் சட்டம் இயற்றப் படும் என்று அமைச்சர் கூறினார். சுதந்திர திரைப்படங்களுக்கு அரசு திரையரங்குகளில் ஒரு காட்சி அனுமதிக்கப்படும். திரைப்படத் துறையில் பயிற்சி அளிக்க ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். கலை ஞர்களுக்கான நல நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு ஆகியவை உரிய  நேரத்தில் திருத்தப்படும். ஓடிடி  தளத்தை அரசாங்கம் வலுப்படுத்தும்.  திரையரங்குகளில் ஆன்லைன் நுழை வுச் சீட்டுகள் (இ-டிக்கட்டிங்) வலுப் படுத்தப்படும். சித்ராஞ்சலியின் புதுப்பித்தல் ஒரு வருடத்திற்குள் நிறைவடையும். முக்கிய திரைப்படத் தொழிலாளர் களின் நினைவைப் பாதுகாக்க ஒரு அருங்காட்சியகம் நிறுவப்படும் என்று  அமைச்சர் சஜி செரியன் மேலும் கூறினார்.