states

img

கேரளாவின் உயர் வளர்ச்சி: பொருளாதார ஆய்வறிக்கை

கேரளாவின் உயர் வளர்ச்சி: பொருளாதார ஆய்வறிக்கை

திருவனந்தபுரம் கேரளா அனைத்து துறைகளிலும் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளதாக பொ ருளாதார ஆய்வறிக்கை தெரிவித் துள்ளது. 2025 க்கான அறிக்கையை நிதிய மைச்சர் கே.என். பாலகோபால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். கேரளாவின் பொருளாதாரம் 2024-25 ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. சராசரி வருமானம் அதிகரிப்பு நெல் சாகுபடி, மீன்வளத் துறை, தொழில் துறை, கூட்டுறவுத் துறை, தகவல் தொழில் நுட்பத் துறை, பொது விநியோகத் துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் கேரளா ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கேரளாவின் பொருளாதாரம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2023-24 ஆம் ஆண்டில் ரூ.6,45,31,002 லட்சத்திலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ரூ.6,85,28,316 லட்ச மாக 6.19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  கேரளா வில் ஒரு நபரின் சராசரி வருமானம் தேசிய சரா சரியை விட அதிகமாக உள்ளது. சேவைத்துறை ஆதிக்கம் சேவைத் துறை தொடர்ந்து ஜிஎஸ்டிபி-யில் ஆதிக்கம் செலுத்துகிறது. பல்வேறு துறை களில் ஜிஎஸ்டிபி வளர்ச்சி 2024-25 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது. முதன்மைத் துறை யின் வளர்ச்சி 2023-24 இல் 0.24 சதவிகிதத்தி லிருந்து 2024-25 இல் 2.36 சதவிகிதமாக அதிக ரித்துள்ளது. இரண்டாம் நிலைத் துறை 2024-25 இல் 7.87 சதவிகிதமாக வளர்ந்தது. இது 2023-24 இல் 9.74 சதவிகிதமாக இருந்தது. வருவாயை அதிகரிப்பதன் மூலமும் செல வினங்களை பகுத்தாய்வு செய்வதன் மூலமும் கேரளா விவேகமான நிதி ஒருங்கிணைப்பு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.  2023-24 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு  உற்பத்தியில் (GSDP)  நிதிப் பற்றாக்குறை 3.02  சதவிகிதமாக இருந்தது, 2024-25 ஆம் ஆண்டில் 3.86 சதவிகிதமாக சிறிதளவு அதிகரித்தது. 2025-26 ஆம் ஆண்டில் 3.16 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல்,  வருவாய் பற்றாக்குறை 2024-25 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.49 சதவிகிதமாக உள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டில் 1.6 சதவிகிதமாக இருந்தது. வருவாய் பற்றாக்குறை 2025-26 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில மொத்த வருவாய் அதிகரிப்பு மாநிலத்தின் மொத்த வருவாய் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.1,24,486 கோடியிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ரூ.1,24,861.07 கோடி யாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுக ளை விட 0.3 சதவிகிதம் வளர்ச்சி. இருப்பி னும், முந்தைய ஆண்டை விட 2024-25 ஆம் ஆண்டில் மையத்திலிருந்து பரிமாற்றங்கள் 6.15 சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக 2020-21 ஆம் ஆண்டில் பதிவான எதிர்மறை வளர்ச்சியைத் தவிர, மாநிலத்தின் சொந்த வருவாய் வசூல் பல ஆண்டுகளாக அதி கரித்து வருகிறது. 2023-24 உடன் ஒப்பிடும் போது 2024-25 ஆம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் வசூல் 2.7 சதவிகிதம் அதி கரித்துள்ளது. அதே காலகட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வசூல் 3.1 சதவிகிதமும், வரி அல்லாத வருவாய் 0.9 சதவிகிதமும் அதிகரித் துள்ளது. மொத்த செலவினத்தில் வளர்ச்சி 2023-24 இல் 0.5 சதவிகிதத்திலிருந்து 2024-25 இல் 9.0 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. மொத்த வருவாய் செலவினம் 2023-24 இல் 0.5 சதவிகிதத்திலிருந்து 2024-25 இல் 9.3 சத விகிதமாக அதிகரித்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் 0.48 சதவிகிதமாக இருந்த மொத்த மூலதனச் செலவு, 2024-25 ஆம் ஆண்டில் 8.96 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியி யல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியா மற்றும் கேரளாவில் நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) கூட்டுப் பணவீக்கம், 2025 செப்டம்பரில் முறையே 1.54 சதவிகிதம் மற்றும் 9.05 சதவிகிதமாக இருந்தது. கேரளாவில் கிராமப்புற பண வீக்கம், 2025 செப்டம்பரில் நகர்ப்புற பண வீக்கத்தை விட அதிகமாக இருந்தது. முதன்மைத்துறையில் வளர்ச்சி முதன்மைத் துறை, 2023-24 ஆம் ஆண்டில் 0.24 சதவிகிதமாக இருந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டில் 2.36 சதவிகித உயர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முதன்மைத் துறையில், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், 2023-24 ஆம் ஆண்டில் 1.25 சதவிகிதமாக இருந்த நிலை யில், 2024-25 ஆம் ஆண்டில் 2.14 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு 10.55 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது, இது 2023-24 ஆம் ஆண்டில் 3.58 சதவிகித வளர்ச்சியாக இருந்தது. 2024-25 ஆம் ஆண்டில், மொத்த ஜிஎஸ்விஏ -வில் முதன்மைத் துறை 8.06 சதவிகித பங்களிப்பை வழங்கியது, அதே நேரத்தில் விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் 7.64 சதவிகித பங்களிப்பு உள்ளது.