states

img

கர்நாடக அமைச்சரவை முடிவால் பாஜகவிற்கு சிக்கல்

கர்நாடக அமைச்சரவை முடிவால் பாஜகவிற்கு சிக்கல்

40% கமிஷன் குற்றச்சாட்டு

முந்தைய கர்நாடக பாஜக அரசு (எடியூரப்பா - பொம்மை) அரசு ஒப்பந்தத்திற்கு 40% கமிஷன் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை விசாரிக்க நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்தது தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு. விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில், அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு வை (எஸ்ஐடி) அமைக்க கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறுகை யில்,”சிறப்பு விசாரணைக் குழு இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து, மாநில அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக் கும். தொடர்ந்து விசாரணை அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக் கப்படும்” என அவர் கூறியுள்ளார். 40% கமிஷன் முறைகேடுகளை விசா ரிக்க சிறப்பு விசாரணைக் குழுவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதால் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளது.