states

img

தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம் மீட்டெடுக்கப்படும் வரை போராட்டம் விவசாய, கிராமப்புற தொழிலாளர் சங்கங்களின் கூட்டு மேடை பிரகடனம்!

தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம் மீட்டெடுக்கப்படும் வரை போராட்டம் விவசாய, கிராமப்புற தொழிலாளர் சங்கங்களின் கூட்டு மேடை பிரகடனம்!

புதுதில்லி இந்தியாவின் கிராமப்புற ஏழை மக்க ளின் வாழ்வாதார உரிமையான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைப்  (MGNREGA) பாதுகாக்கவும், அதனை மீட்டெ டுக்கவும் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்கங்களின் கூட்டு மேடை தீர்மானித்துள்ளது. தில்லியில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில், ஒன்றிய அரசின் புதிய “விபி-ஜி ராம் ஜி” (VP-Gram-G 2025) சட்டத்திற்கு எதிராகக் கடும் கண்டனம் தெரி விக்கப்பட்டது. புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு:  160 எம்.பி.க்கள் ஆதரவு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டம், வேலை உறுதித் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் குற்றம் சாட்டினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 முக்கிய அரசியல் கட்சிகளின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். தொழிலாளர் விரோதப் போக்குடன் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தை நிறுத்தக் கோரி, 160-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களின் கையெழுத்துடன் பிரதமரிடம் மனு அளிக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். முக்கியக் கோரிக்கைகளும் போராட்டமும் மாநிலங்கள் மற்றும் கிராம சபைகளின் அதிகாரத்தைப் பறிக்கும் இப்புதிய சட்டத்தால், மக்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம்பெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகத் தொழிலா ளர்கள் வேதனை தெரிவித்தனர். மாநாட்டில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகள்: Lவிபி-ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்க: புதிய சட்டத்தைத் திரும்பப் பெற்று, பழைய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். Lவேலை நாட்களும் ஊதியமும்: ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்குக் குறைந்தது 200 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும். தினசரி ஊதியமாக ரூ.700 நிர்ணயிக்கப்பட வேண்டும். L தொழில்நுட்பத் தடைகளை நீக்குக: வரு கைப் பதிவு மற்றும் ஊதியக் கொடுப்பன வுகளில் உள்ள சிக்கலான டிஜிட்டல் முறைக ளைக் கைவிட வேண்டும். மே 15 வேலைநிறுத்தம் தலைமைக்குழுவின் சார்பாக பி. வெங்கட் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 15 அன்று மாபெரும் தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக மீட்டெடுக்கப்படும் வரை ஓயமாட்டோம் என மாநாடு எச்சரித்துள்ளது.