states

img

டிரம்ப் ஆட்சி : இதுவரை இல்லாத அளவு செல்வந்தர்களுக்கானது

டொனால்டு டிரம்பின் பதவியேற்பு உரையும், ஜனாதிபதியாக முதல் நாளில் அவர் பிறப்பித்த  நிர்வாக உத்தரவுகளின் பரபரப்பும், டிரம்ப்  தான் சொன்னதையே செய்கிறார் என்பதையே காட்டுகின்றன. பனாமா கால்வாயின் கட்டுப்பாடு 1977ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தத்தின்மூலம் பனா மாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இப்போது அதனை மீண்டும் கைப்பற்றி, அமெரிக்காவை மீண்டும் ஒரு சிறந்த நாடாக மாற்றப்போவதாக டிரம்ப் கூறியிருக்கிறார். அவர் “மெக்சிகோ வளைகுடாவை” “அமெரிக்க வளைகுடா” என்று மறுபெயரிட்டுள்ளார். 

அதி தீவிர வலதுசாரிகளின்  அகோரப் பசிக்குத் தீனி...

சமீபத்திய வரலாற்றில் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்யாத அளவுக்கு அமெரிக்க பிரதேசத்தை விரிவுபடுத்துவதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார். மெக்சி கோவுடனான தெற்கு எல்லைகளில் அவசர நிலையை டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் எல்லையைக் கடக்கும் குடியேறிகளைச் சரி பார்க்க இராணுவத்தை நிறுத்தியுள்ளார். அதி தீவிர வலதுசாரிகளின் பசியைத் தூண்டும் விதத்தில் நாட்டில் பிறப்பால் வரும் நபர்க ளின் குடியுரிமையை ரத்து செய்வது உட்பட  பல்வேறு குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைக ளையும் அறிவித்திருக்கிறார். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது தொடர்பாகவும், நாட் டிற்குள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைக ளை அகற்றுவது தொடர்பாகவும்நிர்வாக உத்தரவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. எண் ணெய் பெறுவது தொடர்பாகவுள்ள கட்டுப்பா டுகளையும் கைவிடத் தயாராகி வருகிறது.

சமூகப் பாதுகாப்பு  ஒழித்துக் கட்டப்படும்

டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதி யாக பதவியேற்கும் விழாவில் தெளிவாகக் காணப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், தொழில்நுட்ப பில்லியனர்களும், பெரும் பணக்காரர்களும் டிரம்பிற்கு அளித்த ஆதர வாகும். உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் நிர்வாகத்தில் பிற பில்லி யனர்கள் ஆற்றிய முக்கிய பங்கு, ஆட்சியை செல்வந்தர்களின் ஆட்சி போல தோற்ற மளிக்கச் செய்திருக்கிறது. இவை, சமூகப் பாது காப்பு நடவடிக்கைகள் ஒழித்துக்கட்டப்படும் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கின் றன. மேலும் இது பெரும் வர்த்தகர்கள் மற்றும்  கார்ப்பரேட்டுகளின் நலன்களையே முழுமை யாக பிரதிபலித்திடும் என்பதையும் காட்டி யிருக்கிறது.

கியூபா, வெனிசுலாவை  குறி வைக்கும் அணுகுமுறை

சர்வதேச உறவுகளின் மட்டத்தில், டிரம்ப் ஜனாதிபதி பதவி பலதரப்பு, வர்த்தக வரிகள் மற்றும் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் சீர் குலைவை ஏற்படுத்தும் என்றாலும், அடிப்படை யில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்க ளைப் பின்பற்றுவதில் ஒரு தொடர்ச்சி இருக்கும். பைடன் ஆண்டுகளில் அமெரிக்கா காசா மீதான  இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை தூண்டிவிட்டு நிதியளித்தது. ரஷ்யா-உக்ரைன் மோதல் உக்ரைனுக்கு தடையற்ற இராணுவ மற்றும் நிதி ஆதரவுடன் ஒரு முழுமையான போராக மாறுவதை உறுதி செய்தது. பைடன் சீனாவுடன் அதிகரித்து வரும் மோதலையும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டணிகளை உருவாக்கும் பாதையையும் தொடர்ந்தார். டிரம்ப் நிர்வாகத்தின் அமைப்பைப் பார்க்கும் போது, லத்தீன் அமெரிக்காவில் கியூபா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் மீது அது மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறையைப் பின்பற்றிடும் என எதிர்பார்க்கலாம். 20 ஆயிரம் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் அமெரிக்காவிற்கு இந்திய பொருட்கள் ஏற்றுமதி மீதான வரிகள் மற்றும் கட்டுப்படுத் தப்பட்ட விசா கொள்கை தொடர்பாக டிரம்ப் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை மோடி அரசாங்கம் ஆவலுடன் கவனித்துக் கொண்டி ருக்கிறது. ஆவணமற்ற குடியேறிகளை நாடு கடத்துவதாக டிரம்ப் அச்சுறுத்தி இருப்பதை நடைமுறைப்படுத்தினால், ஏற்கனவே அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த தாக அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20,000 இந்தியர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.

முன்னுரிமை பெறும்  இந்திய செல்வந்தர்கள்

மிக முக்கியமாக, மோடி அரசாங்கம் தான் அமெரிக்காவின் தாசானுதாசன் என்றும், ஒரு நல்ல மற்றும் நம்பகமான கூட்டாளி என்றும் காட்டிட தீவிரமாக உள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கடந்த சில வாரங்களில் வாஷிங்டன்னுக்கு இரு முறை சென்று வந்துள்ளார். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணத்தில், புதிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் உட்பட குவாட் நாடு களின் மூன்று வெளியுறவு அமைச்சர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தி இருக்கிறார். ஆனால் டிரம்புடன் இருக்கும் புகைப்படத்தை பதவியேற்புக்கு முந்தைய இரவு விருந்தில் கலந்து கொண்ட முகேஷ் மற்றும் நிதா அம்பானி ஆகியோர் பெற்றனர். இப்போது வாஷிங்டன் னில் அமைச்சர்களைக் காட்டிலும் செல்வந்தர் கள் முன்னுரிமை பெற்றிருக்கிறார்கள். மோடி அரசாங்கம், டிரம்பின் விருப்பங்க ளை நம்பி, தவறான பாதையில் செல்வதற்குப் பதிலாக, நம் நாட்டின் கேந்திர சுயாட்சியை (strategic autonomy) மீட்டெடுப்பதற்கும் கடு மையான மந்த நிலையைச் சந்தித்துவரும் இந்தி யப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் தன்னுடைய உத்தியை மறுபரிசீலனை செய்வதே நல்லது. ஜனவரி 22, 2025, தமிழில் : ச.வீரமணி