நிவாரணப் பொருட்களுடன் சென்ற தன்னார்வலர்களை கடத்தியது இஸ்ரேல் சர்வதேசச் சட்டத்தை மீறிய செயல் : சுமூத் கப்பல் குழு கடும் கண்டனம்
காசா நிவாரணப் பொருட்களுடன் சென்ற சமூக செயற்பாட்டா ளர்களை இஸ்ரேல் ராணு வம் கடத்தி இருப்பது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என உலக சுமூத் கப்பல் குழு கடுமை யாகக் கண்டித்துள்ளது. மேலும் கடத்தப்பட்டவர்களின் நிலையை அறியவும், மீட்கவும் உலக நாடுக ளின் தலைவர்கள் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளது. காசாவில் மரணத்தின் விளிம்பில் உள்ள பாலஸ்தீ னர்களுக்கு வழங்குவதற்காக உணவு, மருந்துகள், குழந்தைக ளுக்கான பால் பவுடர்கள் என நிவாரணப் பொருட்களை 50 கப்பல் களில் ஏற்றிக்கொண்டு செப்டம்பர் முதல் வாரம் “உலக சுமூத் கப்பல் குழு’ (Global Sumud Flotilla) காசாவை நோக்கிய பயணத்தை துவங்கியது. கிரேட்டா தன்பர்க், மண்டேலாவின் பேரன்... இந்த கப்பல்களில் நாடாளு மன்ற உறுப்பினர்கள், கலை ஞர்கள், சமூக செயல்பாட்டா ளர்கள், பத்திரிகையாளர்கள் என 47 நாடுகளைச் சேர்ந்த கிட்டத் தட்ட 500 தன்னார்வலர்கள் பய ணித்தனர். சுற்றுச்சூழல் செயற்பாட் டாளரான கிரேட்டா தன்பர்க், பிரபல திரைகலைஞர் சூசன் சரண்டன், நெல்சன் மண்டேலாவின் பேரன் மாண்ட்லா மண்டேலா என சில சமூக பிரபலங்களும் இந்த பய ணத்தில் இணைந்துள்ளனர். இந்த கப்பல் காசா எல்லையில் இருந்து 120 கி.மீ தூரத்தில் இருந்த போது இஸ்ரேலின் கடற் படையினர் சட்டவிரோதமாக அக் கப்பல்களை இடைமறித்தனர். பின் அக்கப்பல்களை கைப்பற்றியது டன் அதில் பயணித்து வந்த நூற்றுக் கணக்கான தன்னார்வலர்களை சர்வதேசச் சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரி வித்து அக்கப்பல் குழுவின் அதி காரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில் இஸ்ரேலின் இந்த செயல் சர்வதேசச் சட்டத்தை யும் அடிப்படை மனித உரிமை களையும் நேரடியாக மீறும் சட்ட விரோத கடத்தல் என கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும் தங்கள் குழுவைச் சேர்ந்த 443 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களை ‘எம்.எஸ்.சி ஜோஹன்னஸ்பர்க்’ என்ற கடற்படைக் கப்பலில் சட்டவிரோதமாக தடுப்புக் காவ லில் அடைத்து வைத்துள்ளதாக வும் தெரிய வருவதாகக் குறிப் பிட்டுள்ளது. மேலும் எங்களுக்கு முறை யாக முழு தகவலும் தெரிவிக்கப்பட வில்லை. எங்கள் குழுவை பிரதி நிதித்துவப்படுத்துகிற அடாலா அமைப்பு வழக்கறிஞர்களுக்கும் (Adalah lawyers) கூட மிகக் குறைந்தபட்ச தகவல்களே கொ டுக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ள அவர்கள் துறைமுகத் திற்கு வந்து சேர்வார்களா என்பது குறித்துக்கூட முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை. போர்க்குற்றத்தில் ஈடுபடும் இஸ்ரேல் சர்வதேசக் கடற்பரப்பில் மனி தாபிமான உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் படகுகளை வழி மறிப்பது என்பது ஒரு போர்க் குற்றம். அதே போல இஸ்ரேல் ராணுவத்தால் அடைத்து வைக்கப் பட்டுள்ளவர்களுக்கான சட்ட ஆலோசனையை மறுப்பதும், அவர்களின் தற்போதைய நிலை யை வெளியில் சொல்லாமல் மறைப்பதும் அந்தக் குற்றத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது. தற்போது காணாமல் போன, கடத்தப்பட்ட தன்னார்வலர்களின் நிலை குறித்தான தகவல்களைப் பெறுவதற்கும், அவர்களின் பாது காப்பை உறுதி செய்வதற்கும், அவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் உலக நாடுகளின் தலைவர்கள், அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உடனடியா கத் தலையிட வேண்டும் என்றும் அவ்வமைப்பு அழைப்பு விடுத் துள்ளது. மேலும் இஸ்ரேலின் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை உடைத்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் இனப் படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதே எங்கள் நோக்கம் என்பதில் நாங்கள் தெளி வாக உள்ளோம். எங்கள் கப்பல் குழுவுக்கு எதிரான ஒவ்வொரு அடக்குமுறையும், காசாவில் வன்முறை அதிகரிப்பதும், ஒற்றுமை நடவடிக்கைகளைத் தடுக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சி யும் எங்கள் உறுதியை மேலும் பலப்படுத்தவே செய்கின்றது என அவ்வறிக்கையில் குறிப்பிட் டுள்ளனர்.