இந்திய கால்நடை தீவனம் சீனா அதிகம் இறக்குமதி செய்ய வாய்ப்பு
கனடாவில் இருந்து இறக்குமதி செய் யும் பொருட்கள் மீது சீனா 100 சத வீதம் வரை வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு மார்ச் 20 முதல் அமலில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் கால்நடை களுக்கான தீவனத்திற்கு தேவையான ராப்சீட் எனப்படும் கடுகு உணவுப் பொரு ளை இந்தியாவில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுவதாக சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப் பின் தலைமை நிர்வாக அதிகாரி மேத்தா தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில் மட்டும் சுமார் 52,000 டன் இந்திய ராப்சீட் உணவை சீனா இறக்குமதி செய்துள்ளது. இது 2024 இல் இந்தியாவிலிருந்து சீனா இறக்குமதி அளவை விட நான்கு மடங்குஅதிகமாகும். கனடா பொருட்கள் மீதான வரிகள் கார ணமாக சீனாவில் குறிப்பிட்ட கால்நடைத் தீவனங்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக சீன கால்நடை வளர்ப்போர், இந்திய ராப்சீட் தீவனத்தை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகின்றது. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே உள்ள எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட சில பிரச்சனைகளின் காரணமாக இருநாடுகளுக் கும் இடையே வணிக உறவுகள் போதிய அளவில் இல்லை. உதாரணமாக உலகின் மூன்றாவது பெரிய ராப்சீட் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. ஆனால் 2024 இல் இந்தியாவில் இருந்து 13,100 டன்களை மட்டுமே சீனா இறக்குமதி செய்துள்ளது. ஆனால் கனடாவிலிருந்து 2.02 மில்லி யன் மெட்ரிக் டன், ஐக்கிய அரபு அமீர கத்தில் இருந்து 5,04,000 டன்களையும், ரஷ்யாவிலிருந்து 1,35,000 டன்களையும் இறக்குமதி செய்தது. இந்தியா 2 மில்லியன் டன்களுக்கு மேல் ராப்சீட் உணவை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் அதில் சீனாவிற்கு 1 சதவீதத்துக்கும் குறைவாகவே ஏற்றுமதியாகியுள்ளது. தற்போது சீனாவிற்கு தேவை ஏற்பட் டுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களுக்கு இதே போல அதிகமாக இறக்குமதி செய்தால் இந்தியா ராப்சீட் உணவை அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக சீனா மாறலாம் என கூறப்படுகின்றது.