இஸ்ரேலுடன் தடையற்ற வர்த்தகத்தை உருவாக்க இந்தியா முயற்சி
டெல்அவிவ் இஸ்ரேலுடன் தடையற்ற வர்த்தகத்தை உரு வாக்குவதற்காக இந் தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த முயற்சிக்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித் துள்ளன. இந்தியாவின் வர்த்தக மற் றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இஸ்ரேல் பிர தமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் (இஸ்ரேல்) ஆகியோரை ஜெரு சலேமில் சந்தித்துப் பேசிய பின் னர் இந்த முடிவு அறிவிக்கப் பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளில் ஒத்து ழைப்பை மேலும் அதிகப்படுத் தும் நிலைக்கு இரு நாடுகளும் நகர்ந்துள்ளன. இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் மீது நடத்தி வரும் இனப்படுகொலைக்கு தேவை யான டிரோன் உள்ளிட்ட ஆயு தங்களை இந்தியா தருகிறது. குறிப்பாக அதானியின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் அனைத்து உதவிகளையும் செய்து வரு கிறது. இனப்படுகொலை செய் யும் நாட்டுடனான உறவுகளை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருவது ஏற்புடையது அல்ல என கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) உருவாக்குவது குறித்து 2013 முதல் முயற்சிகள் நடந்து வருகிறது. ஒன்றிய அமைச்சர் கோயலுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியா ளர்களை சந்தித்த நேதன்யாகு இரு நாடுகளும் முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட வற்றில் ஆழமான ஒத்துழைப்புக் கட்டத்திற்குள் நுழைகின்றன. இஸ்ரேலும் இந்தியாவும் தங் கள் கூட்டாண்மையை வலுப் படுத்துகின்றன என கூறியுள் ளார். அதிக முதலீடுகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்தியாவில் இருந்து இஸ்ரேல் வழியாக ஐரோப்பா வரை பொருளாதார வழித்தடத்தை உருவாக்கும் பணிகளும் இதன் மூலம் வேகம் பெறும் என கூறப் படுகிறது. இந்த நடவடிக்கை இஸ்ரே லின் ஹைபா துறைமுகத்தை கைப்பற்றியுள்ள அதானி மற் றும் இஸ்ரேல் நிறுவனங்களு டன் வணிக உறவை வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்த கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக பலனளிக்கும்.