பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் குவா லியரில் நவகிரக கோவில் திறப்பு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் உயிரி ழந்தார். மற்றொரு பெண் சிறுமி உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். தில்லியில் கடந்த மாதம் 800-க்கும் மேற்பட்ட வர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தில்லி பாஜக அரசுக்கு உத்தரவிட்டது. தன் மீது அவதூறு பரப்பியதாக காங்கிரஸ் தலை வர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள அசாம் பாஜக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார். அசாமில் விரை வில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஹிமந்த பிஸ்வா நஷ்டஈடு கேட்பது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.