தலித் ஐபிஎஸ் அதிகாரியின் தற்கொலை விவகாரத்தில் உடனடி நடவடிக்கை வேண்டும் ஹரியானா முழுவதும் போராட்டம் வெடிக்கும்
பாஜக அரசுக்கு தலித் அமைப்புகள் எச்சரிக்கை
சண்டிகர் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்தவர் ஒய்.பூரன் குமார். இவர் சண்டிகர் செக்டார் 11 பகுதியில் அக்., 7ஆம் தேதி துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தலித் சமூ கத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமாரின் மரணத்திற்கு டிஜிபி சத்ருஜித் சிங் கபூர், ரோத்தக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிஜர்னியா ஆகியோரின் சாதிய வன் கொடுமையே (சாதி அடிப்படையிலான பாகுபாடு) காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஏடிஜிபி ரேங்க்கில் உள்ள ஒரு ஐபிஎஸ் அதி காரி சாதி ரீதியிலான துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டது ஹரியானாவில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. குறிப்பாக ஹரியானா பாஜக அரசு பூரன் குமார் தற்கொலை விவகாரத்தில் உடனடி நடவ டிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருவது பெரும் சர்ச்சையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோரிக்கைக்கு மவுனம் காக்கும் பாஜக பூரன் குமாரின் குடும்பத்தினர் இரண்டு முக்கி யக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். முத லாவது, சாதி ரீதியாக நெருக்கடி அளித்த டிஜிபி சத்ரு ஜித் சிங் கபூர், ரோத்தக் மாவட்ட எஸ்பி நரேந்திர பிஜர்னியா ஆகியோரை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். இந்த அதிகாரிக ளின் சதித் திட்டமே பூரன் குமாரின் தற்கொலைக்கு காரணம் ஆகும். இரண்டாவதாக, குற்றம் சாட்டப் பட்டவர்களை தலித்/பழங்குடியினர் வன்கொ டுமை சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் கைது செய்து குற்றப்பத்திரிகைகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும். இந்நிலையில், ஞாயிறன்று சண்டிகரின் செக்டர் 20 பகுதியில் பூரன் குமாரின் மரணம் தொ டர்பாக பல தலித் அமைப்புகள் கூட்டிய ஒரு பெரிய மகா பஞ்சாயத்து நடைபெற்றது. இந்த மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பூரன் குமாரின் தற் கொலை விவகாரத்தில் ஹரியானா பாஜக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்துவோம் என தலித் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள் ளன. மேலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தலித் அமைப்புகளின் மகா பஞ்சா யத்து முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.