எஸ்எப்ஐக்கு மகத்தான வெற்றி கேரள பல்கலைக்கழக மாணவர் தேர்தல்
வளாகத்தை போர்க்களமாக்கியது கேஎஸ்யூ
கேரள பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் தலைவர், பொதுச்செய லாளர் உட்பட 6 இடங்களில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) மகத்தான வெற்றி பெற்றது. கணக்குக் குழுத் தேர்தல்களில் ஐந்து இடங்களில் நான்கை எஸ்எப்ஐ வென்றது. எஸ்எப்ஐ வெற்றியை சீர்குலைக்கும் நோக் கத்துடன் கேஎஸ்யூ- இளைஞர் காங் கிரஸ் வன்முறையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் அமைதியாக நடந்தது. பிற்பகல் பதிவான வாக்குகள் எண்ணும் பணியை முடக்க கேஎஸ்யூ இளைஞர் காங்கிர சார் வளாகத்திற்கு வெளியே திட்டமிட்டு அணி திரண்டனர். தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்டதும் 6 இடங்களுக்கான வெற்றியை கொண்டாடும் வகை யில் எஸ்எப்ஐ மணவர்கள் முழக்கமிட்டனர். அப்போது வெளி யில் இருந்து கல்வீசப்பட்டது. இதில் தனேஷ், ஆபித், கணேஷ், விஜயன் உள்ளிட்ட பல மாண வர்கள் படுகாயம் அடைந்தனர். காவல்துறையினர் வன்முறையை தடுக்க முயன்றனர். இதில் சில காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. கேரள பல்கலைக்கழக தேர்த லில் எஸ்எப்ஐ தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. கடந்த முறை நடந்த தேர்தலில் வாக்கு எண்ணும்போது வாக்குச் சீட்டு களை கிழித்து எறிந்து அந்த தேர்தலை கேஎஸ்யூ சீர்குலைத் தது. அதைத் தொடர்ந்து நீதிமன்ற கண்காணிப்பில் ஏப்ரல் 10 வியாழ னன்று காலை தேர்தல் நடை பெற்றது. நீதிமன்ற உத்தரவுப்படி அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வன்முறை ஏற்படா மல் தடுக்கப்பட்டது. வாக்குகள் எண்ணி முடிந்த உடன் பல்கலைக் கழக கல்லூரிக்கு வெளியில் இருந்து கற்களை வீசி வன்முறைக் களமாக மாற்றினர். காயமடைந்த மாணவர்களை மருத்துவமனை க்கு கொண்டு சென்ற வாகனத்தை தடுக்கவும் கேஸ்யூ- இளைஞர் காங்கிரஸார் முயன்றனர்.