வங்கதேச தூதரகம் முன்பு இந்துத்துவா குண்டர்கள் வன்முறை
வங்கதேசத்தில் சிறுபான்மையின இளைஞர் தீபு சந்திர தாஸ் (இந்து மதத்தைச் சேர்ந்தவர்) அடித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, சர்வ பாரதிய ஹிந்தி பெங்காலி சங்கம், விஷ்வ இந்து பரிஷத் (விஹெச்பி), பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் செவ்வாயன்று தில்லியில் உள்ள வங்க தேச தூதரகத்துக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பாது காப்புப் படையினருடன் இந்துத்துவா குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.