முஸ்லிம் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்வதற்காக குழந்தைகளை கொல்ல சதி
ஶ்ரீராம் சேனா மாவட்டத் தலைவர் உட்பட 3 பேர் கைது
கர்நாடகா மாநிலம் பெல காவி மாவட்டத்தில் உள் ளது ஹூள்ளிக்கட்டி. இந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த ஜூலை 20ஆம் தேதி, 11 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாணவர்கள் அனைவரும் பெலகாவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்த சம்பவம் தொடர் பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணை முடி வில் பள்ளியில் பணியாற்றும் முஸ் லிம் தலைமை ஆசிரியரை இட மாற்றம் செய்வதற்காக பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்துத்துவா குண்டர்கள் விஷம் கலந்தது தெரிய வந்தது. என்ன நடந்தது? சுலைமான் கொரிநாயக் என்ப வர் ஹூள்ளிக்கட்டி பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சுலைமான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்ற நிலை யில், அவர் சுமார் 13 வருடங்களாக அங்கு பணியாற்றி வருகிறார். கல்வியை மேம்படுத்துவதில் சுலை மான் தீவிர பங்காற்றினார். உள்ளூர் கிராம மக்களிடம் அவர் மிகவும் நல்ல உறவில் இருக்கிறார். கல்வி என்றாலே பாஜக உள்ளிட்ட இந்துத் துவா கும்பலுக்கு கசக்கும் என்ற நிலையில், ஒரு முஸ்லிம் எப்படி ஹூள்ளிக்கட்டி அரசுப் பள்ளியின் தலைமை பொறுப்பை ஏற்கலாம் என சுலைமானுக்கு அடிக்கடி இந் துத்துவா கும்பல் நெருக்கடி அளித் துள்ளது. மேலும் பள்ளியில் இருந்து சுலைமானை இடமாற்றம் செய்ய வேண்டும் என அரசுக்கும் இந் துத்துவா குண்டர்கள் நெருக்கடி அளித்து வந்துள்ளனர். இந்த நெருக்கடியை சுலைமான் சமா ளித்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு எப்படியாவது அவப் பெயர் ஏற்படுத்தி, பள்ளியில் இருந்து மாற்றி நடவடிக்கை எடுக்க திட்ட மிட்ட இந்துத்துவா குண்டர்கள், பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விஷத்தை (பூச்சிக் கொல்லி) கலந் துள்ளனர். இரண்டு வார கால விசார ணைக்குப் பிறகு ஸ்ரீ ராம் சேனா அமைப்பைச் சேர்ந்த சாகர் பாட் டீல், கிருஷ்ணா மதர், மகனகவுடா பாட்டீல் ஆகிய 3 பேர் பள்ளி தண் ணீர் தொட்டியில் விஷம் கலந்தது தெரியவந்துள்ளது. காவல்துறை அறிக்கை இதுதொடர்பாக பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீமாசங்கர் குலேத் கூறுகையில், “கடந்த ஜூலை 20ஆம் தேதி அந்தப் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். விசாரணையின் போது தண்ணீர் தொட்டியில் ஒரு வித நாற்றம் வந்தது. அதற்குள்ளேயே ஒரு பூச்சி மருந்தின் பாட்டிலும் கண் டறியப்பட்டது. அதே போல பரி சோதனையில் தண்ணீர் தொட்டி யில் பூச்சி மருந்து கலந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி னோம். அதில் பள்ளியில் பணியாற் றும் இஸ்லாமிய தலைமை ஆசி ரியரை இடமாற்றம் செய்வதற்காக இந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இதை அரங்கேற்றி யது தெரிய வந்தது. சாகர் பாட்டீல் என்பவர் ஶ்ரீ ராம் சேனா என்ற இந்து இயக்கத்தின் மாவட்டத் தலைவராக உள்ளார். அவர் தான் இந்த சம்ப வத்தின் மூளையாக செயல்பட் டுள்ளார். அவரும் கூட்டாளிகளும் கடந்த ஜூலை 18ஆம் தேதி முனவல்லி என்கிற பகுதியில் உள்ள கடையில் பூச்சி மருந்து வாங்கியுள்ளனர். இவர்கள் நேரடியாக கலக்காமல் அங்குள்ள சிறுவனுக்கு ரூ.500 பணம் மற்றும் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்து, அவன் மூலமாக தண் ணீர் தொட்டியில் விஷம் கலந்துள்ள னர். ஆனால் சிறுவன் பூச்சி மருந்து பாட்டிலை அருகிலேயே போட்டு சென்றுவிட்டான். இ துதான் எங்க ளுக்கு கிடைத்த துருப்பு. அதை வைத்துக் கொண்டு கடைக்கா ரரை பிடித்து, பூச்சி மருந்து யார் வாங்கினார்கள் என்று கண்ட றிந்தோம். விசாரணையில் அவர் கள் 3 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்த னர். அதன் அடிப்படையில் தான் அவர்களை கைது செய்தோம்” என அவர் கூறினார். கர்நாடக முதலமைச்சர் கடும் கண்டனம் இந்த சம்பவத்துக்கு கர் நாடகா முதலமைச்சர் சித்த ராமையா உள்ளிட்டோர் கண்ட னம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் சித்த ராமையா கூறுகையில்,”பள்ளியில் விஷம் கலக்கப்பட்ட விவகா ரத்தில் உயிர் இழப்பு எதுவும் ஏற் படாதது அதிர்ஷ்டம். இந்த சம்ப வத்திற்கு ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக், மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா ஆகியோர் பொறுப் பேற்பார்களா? சிறு குழந்தை களுக்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சம்பவம், மத அடிப்ப டைவாதம் மற்றும் வகுப்புவாத வெறுப்பால் தூண்டப்பட்டவர்கள் எந்த மாதிரியான கொடூரமான செயல்களைச் செய்ய முடியும் என்பதற்கு சாட்சியமளிக்கிறது. இரக்கம்தான் மதத்தின் சாராம்சம் என்று சொன்ன ஷரணர்களின் நாட்டில் இவ்வளவு கொடுமை யும் வெறுப்பும் இருக்க முடியும் என்பதை என்னால் நம்பவே முடிய வில்லை. வகுப்புவாதத்திற்கு எதி ரான நமது முயற்சிகள் பலனளிக்க வேண்டுமானால், பொதுமக்களும் அத்தகைய சக்திகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் ; தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். புகார்களைத் தெரிவிக்க வேண் டும். குழந்தைகளைப் படுகொலை செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு சதியை முறியடித்ததற்காக காவல்துறையினரைப் பாராட்டு கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கு உரிய தண்டனை உறுதி செய்யப்படும்” என அவர் கூறி னார்.