states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தில்லியில் கடும் பனிமூட்டம் 400 விமானங்கள் ;  81 ரயில்கள் தாமதம்

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 9 மணிநேரம் அடர்பனி நீடித்தது. இந்த ஆண்டின் குளிர்காலத்தில் மிக நீண்ட பனிமூட் டம் ஆகும். தில்லி யின் பாலம் பகுதியில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அதி காலை 3 மணி வரை  சுமார் 9 மணி நேரம் எதிரில் இருப்பவர் கள் தெரியாதபடி பனிமூட்டம் நீடித்தது. கடுமையான பனி மூட்டம் காரணமாக விமானங் கள், ரயில் சேவைகளில் பெரிய அளவில் இடையூறு ஏற்பட்டது. 400 விமானங்கள் தாமத்தை எதிர்கொண்டன. 81 ரயில்கள் தாமதமாக சென்றன. சில தொலைதூர ரயில்கள் 8 மணிநேரம் தாமதத்தில் கிளம்பி சென்றன என செய்திகள் வெளி யாகியுள்ளன.

அண்ணா பல்கலை. வளாகத்திற்குள்  மேலும் புதிய கட்டுப்பாடுகள்

சென்னை, ஜன. 5 - அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள், பேராசிரியர்கள், பணி யாளர்கள் தவிர வெளிநபர்களுக்கு அனு மதி மறுக்கப்பட்டுள்ளது. அனைவரும் அடை யாள அட்டைகளைக் கட்டாயம் அணிந் திருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. “அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பணியாளர்களை மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். வெளிநபர்கள் நடைப்பயிற்சி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும். பணி முடிந்ததும் கட்டுமான தொழிலாளர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத வாக னங்கள் நிறுத்தப்பட்டால் போலீசில் புகார் அளிக்கப்படும். ஆன்லைன் நிறுவன டெலி வரி ஊழியர்களுக்கு, அண்ணா பல்கலைக் கழக நுழைவு வாயில் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாணவர்கள் எப்போதும் தங்கள் அடையாள அட்டையை அணிந் திருக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமிரா, மின் விளக்குகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகம்,  டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜன. 5 - தமிழக தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு  மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் ஆண்டுவிழா  கொண்டாட  ரூ. 14.60 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கீடு 

சென்னை, ஜன. 5 - தமிழக சட்டமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். இதில், மாண வர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற  பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இதற்காக, சுமார் ரூ. 15 கோடி நிதி ஒதுக்கப்படும்’ என அறிவித்தார். இந்நிலையில், இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திட, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ. 14 கோடியே 60 லட்சத்து 89 ஆயிரம் ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.  உரிய அறிவுரைகளை பின்பற்றி, பள்ளி ஆண்டுவிழா வை சிறப்பாக கொண்டாட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

விடுதலை ராஜேந்திரனுக்கு  பெரியார் விருது! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜன. 5 - நடப்பு 2025ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை பெறும் விருதாளர்களை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனவரி 15-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்க உள்ளார்.  விருது பெறுவோர் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் மற்றும் 1 சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை வழங்கப்படும். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள விருதுகளின் பட்டியல்:  அய்யன் திருவள்ளுவர் விருது - மு. படிக்கராமு. பேரறிஞர் அண்ணா விருது - தஞ்சாவூர் கீழையூரைச் சேர்ந்த எல். கணேசன். பாவேந்தர் பாரதிதாசன் விருது - பொ. செல்வகணபதி. ‘மகாகவி பாரதியார் விருது’ - கவிஞர் கபிலன், ‘தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது’ - ஜி.ஆர். இரவீந்திரநாத், ‘தந்தை பெரியார் விருது’ - விடுதலை ராஜேந்திரன், ‘அண்ணல் அம்பேத்கர் விருது’ - து. ரவிக்குமார் எம்.பி., ‘முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது’ - பொதியவெற்பன், ‘முத்தமிழறிஞர் கலைஞர் விருது’ - முத்து வாவாசி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது!

விருதுநகர், ஜன. 5 - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சனிக்கிழமையன்று (ஜன. 4) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான நிலையில், ஆலையின் உரிமையாளர் சசிபாலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  விருதுநகா் அருகே வீராா்பட்டி ஊராட்சிக்கு  உள்பட்ட பொம்மையாபுரத்தில் சிவகாசியைச் சோ்ந்த  பாலாஜி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை அண்மையில் சிவகாசியைச் சோ்ந்த  வனிதா பட்டாசு ஆலையின் உரிமையாளா் சசிபாலன் விலைக்கு வாங்கியிருந்தார். எனினும், பட்டாசு ஆலையின் பெயா் மாற்றம் செய்யப் படாத நிலையில், இங்கு விபத்து ஏற்பட்டு 6 பேர் உடல் சிதறி பலியான துயரம் நிகழ்ந்தது. இந்நிலையில், விபத்து தொடர்பாக சிவகாசியைச் சோ்ந்த வனிதா பட்டாசு ஆலை உரிமையாளா் சசிபாலனைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சாத்தூர் பட்டாசு ஆலை  வெடி விபத்து தொடர்பாக இதுவரை 7 பேர் மீது 5 பிரிவு களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காசாவிலுள்ள மருத்துவமனை மீது  இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம்

காசாவின் வட பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைக் கடைப்பிடித்து, மருத்துவமனையை போர்க் களமாக மாற்றுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஐ.நா.வுக்கான சீனத் தூதர் அறிவுறுத்தினார். ஜனவரி 3ஆம் நாளன்று, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய அவசரக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதியான ஃபு சோங் கூறுகையில்,புத்தாண்டை முன்னிட்டு, வட காசாப் பகுதியில் பயங்கர சோகம் நிகழ்ந்தது. வட காசாவிலுள்ள ஒரேயொரு பன்னோக்கு மருத்துவமனை மீது இஸ்ரேல் படை தாக்குதல் தொடுத்து, மருத்துவப் பணியாளர்களை கட்டாயப்படுத்தி காவலில் வைத்து, அப்பாவி நோயாளிகளை கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்ததன் காரணமாக, அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. மருத்துவமனையும் தீயில் சிக்கியது. இஸ்ரேலின் இத்தகைய செயல், சர்வதேச சட்டத்தை, குறிப்பாக சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை கடுமையாக மீறியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறினார்.

பயன்பாட்டிற்கு வந்துள்ள புதிய ரக  சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம்

11.93 மீட்டர் விட்டமும் 180 மீட்டர் நீளமும் கொண்ட புதிய ரக சுரங்கப்பாதை துளையிடும் இயந்தி ரம் ஜனவரி 5ஆம் நாள், மத்திய சீனாவிலுள்ள ஹுபெய் மாநி லத்தின் இச்சாங் நகரிலுள்ள  நீர்வளத்துறை திட்ட பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சீனா சொந்தமாக தயாரித் துள்ள இந்த இயந்திரமானது, கடினப்பாறைகள் நிறைந்த இடத்திலேயே  துளையிடுதல்  பணியும் பொருத்துதல் பணி யும் ஒரே நேரத்தில் மேற்கொள் ளும் திறனை கொண்டது குறிப் பிடத்தக்கது.