குஜராத் மாடல்
நாடு தழுவிய அளவில் லஞ்சம், ஊழல் புரை யோடிப் போய் இருப்பதைக் காட்டும் புள்ளிவிப ரங்கள் கடைசியாக 2019இல் தான் வெளியானது. பாஜக ஆளும் மாநிலங்கள்தான் முன்னணி. இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளாவில்தான் மிகக்குறைவு. பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான குஜராத் ஒருபடி மேலே போய் இருக்கிறது. மூன்று என்ஜின் போட்ட நிர்வா கம் ஓடுகிறது என்று சொல்லிக் கொள்ளும் குஜ ராத்தில் வேறு மட்டத்திற்கு ஊழலை எடுத்துச் சென்றுள் ளார்கள். அரசு இணையதளத்திலேயே எவ்வளவு லஞ்சம் தர வேண்டும் என்று போட்டுவிட்டார்கள். நிலத்தை வகை மாற்றம் செய்து தர வேண்டும் என்றால், மாற்றப்பட வேண் டிய நிலத்தின் வகைக்கு ஏற்றாற் போல லஞ்சத்தை நிர்ணயித்திருக்கிறார்கள். டேபிளுக்கு அடியில் கை நீட்டுவது எல்லாம் காலத்திற்கு ஒவ்வாதது என்று குஜ ராத் மாடல் காட்டுகிறது. லஞ்சத்தை சட்டபூர்வமாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறது என்கிறார்கள் மக்கள்.
ம.பி. மாடல்
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் நகரத்தின் பாகி ரத்புரா பகுதியில் மோசமான தண்ணீரைக் குடித்த தால் பலர் இறந்து போயினர். முதலில் நான்கு பேர் இறந்து போனதாக செய்தி வெளியானது. அடுத்து மேலும் நான்கு பேர் என்றனர். எட்டாக எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால், திடீரென்று செய்தி மாறியது. மூன்று என்று சொல்லத் தொடங்கினார்கள். கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து தற்போதுதான் பத்து பேர் மரணம் என்று அரசு சொல்கிறது. ஊடகங்களுக்கோ குழப்பம். நம்பகத் தன்மை போய் விடுமே..! உண்மையில், அரசு சொல்வதை விட இரு மடங்கு இருக்கும் என்பதுதான் அவர்களுக்குக் கிடைத்த செய்தியாகும். உத்தரப்பிரதேசத்தில் கும்ப மேளா சமயத்தில் ஏற்பட்ட மரணங்கள் எண்ணிக்கை யைக் குறைத்துச் சொன்னதைப் போலத்தான் இதிலும் செய்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்ட னர். இதனால், செய்தியைப் போட புது உத்தியை யோசித் தனர். குறைந்தது 10 பேர் என்கிறார்கள்
. மகாராஷ்டிர மாடல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜனவரி 15 அன்று நடக்கிறது. இந்தத் தேர்தலை நடத்த விரும்பாமல் பாஜக தலைமையிலான அரசு தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது. வெற்றி, தோல்வியைப் பற்றி அவர்கள் கவ லைப்படவில்லை. புதிய தலைவர்கள் தங்கள் கட்சி களில் முன்னுக்கு வருவார்கள் என்பதுதான் அவர்களின் கவலையாகும். ஆனால், தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநகராட்சி மற்றும் நகராட்சி வார்டுகளில் 69 இடங்களில் போட்டியின்றி தேர்வு நடந்துள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மிரட்டப் பட்டிருக்கிறார்கள். அதை மீறி நிற்க முயன்றவர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இப்படித்தான் இந்த முடிவு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன.
மம்தா மாடல்
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு இணையாக சட்டம் ஒழுங்கை சீரழித்து வைத்துள்ள மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்றாகும். திரிணாமுல் கட்சித் தலை வர்கள் குண்டர்கள் பகுதியாக சந்தேஷ்காளி பகுதியை மாற்றி வைத்துள்ளது பழைய செய்திதான். அது இன்னும் அப்படியே தொடர்கிறது. இரண்டு நாட்க ளுக்கு முன்பாக, நில மோசடி விவகாரத்தில் முசா மொல்ல என்பவரை விசாரிக்கக் காவல்துறை செல்கிறது. கட்சிக் காரர்கள் காவல்துறையினரை சுற்றி வளைத்துத் தாக்கி யுள்ளனர். ஆறு காவலர்களுக்குக் காயம். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவ சியம் ஏற்படுகிறது. அதையும் தடுக்க திரிணாமுல் குண்டர் கள் முயல்கிறார்கள். அப்பாவி மக்களின் நிலங்களை இப்பகுதியில் திரிணாமுல் தலைவராக இருக்கும் ஷாஜ கான் ஷேக் தலைமையிலான கும்பல் அபகரிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. கட்சியின் மாநிலத்தலை மையின் ஆசி தொடர்வதால் மக்களின் துயரமும் தொடர் கிறது.
