states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இடி மின்னலில் சிக்கி 19 பேர் பலி

பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்க ளில் ஏற்பட்ட இடி, பலத்த மின்னல், சூறைக்காற்றால் கடுமையான பாதி ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைச் சீற்றங்களில் சிக்கி 48 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். பீகாரின் பல மாவட்டங்களில் புதன்கிழமையன்று இடி யுடன் கூடிய கனமழை பெய்ததில் மக்கள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள் ளனர். தற்போது அம்மாநிலத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கன மழை, இடி, மின்னல் என ஏற்பட்ட திடீர் இயற்கைச் சீற்றத்தால் சில இடங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகி யுள்ளன.  பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் 5 பேர், தர்பங்காவில் 5 பேர், மதுபானியில் 3 பேர், சஹர்சா, சமஸ்திபூரில் தலா 2 பேர், லக்கிசராய், கயா மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

பெண்களை கடத்தி விற்பனை செய்த கும்பல் கைது!

ராஜஸ்தானில் ஏழை குடும்பங்க ளை சேர்ந்த சிறுமிகளை கடத்தி விற்கும் கும்பல்களிடம்  இருந்து பெண்களை விலைக்கு வாங்கி திருமணத்திற்காக மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்த கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் என்ற அறக்கட்டளையின் அலுவலகம் உள்ளது. இந்த அறக் கட்டளை நிர்வாகிகள் ஏழை குடும்பங்க ளைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி  அந்தப் பெண்க ளை கடத்தி, மணப்பெண் தேடும் இளை ஞர்களுக்கு விற்பனை செய்து வந்த கொடுமை நடத்துள்ளது. இவ்வாறு கடத்தப்பட்ட உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அந்த அறக்கட்டளை அலுவல கத்தில் இருந்து தப்பித்து வந்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.  அப்பெண்ணிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் தான் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்  அறக் கட்டளை அலுவலகத்தில் காவல்துறை சோதனை நடத்தி அந்த அறக்கட்டளை நிர்வாகிகளான காயத்ரி, ஹனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.  இது தொடர்பாக காவல்துறை உயரதி காரி ஒருவர் கூறுகையில், பெண்களை கடத்தி விற்பனை செய்யும் ஒரு கும்பல் பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஏழை குடும் பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்கு னரான காயத்ரி விஸ்வகர்மாவுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள். இந்த பெண்களை 2.5 முதல் 5 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து  திருமணம் செய்து கொள்ள பெண்கள் தேடும் இளைஞர்களுக்கு அறக்கட்ட ளையில் இருந்து  விற்பனை செய்து  விடுவார்கள் என தெரிவித்துள்ளார். சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் ‘விலை’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் சிறுமி களுக்கு 18 வயது ஆனதாக காட்டுவ தற்காக போலி ஆதார் கார்டுகளையும்  தயாரித்துள்ளனர். இதுவரை  1500 திருமணங்களை அந்த அறக்கட்டளை நடத்தியுள்ளது. அதன் மீது 10 வழக்கு கள் நிலுவையில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.