அகிம்சை வழியில் காந்தி போராடினார். நேரு தனது இளமைக்காலத்தின் பத்து ஆண்டுகளை தேசத்துக்காக சிறையில் கழித்தார். காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை விட்டு தேசத்துக்காக போராடினார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் யாராவது சுதந்திரத்துக்காக போராடினார்களா?
மோகன் பகவத் அவர்களே! நான் கேட்கும் ஒரு கேள்விக்கு உங்களால் பதில் கூற முடியுமா? ஏன் இதுவரை தலித் அல்லது பிற்படுத்தப்பட்டவர் யாரும் ஆர்எஸ்எஸ் தலைவராக வரவில்லை? இதற்கு உங்கள் பதில் என்ன?
தில்லி தேர்தல் அறிக்கையில் பாஜக புதிதாக எதையும் அறிவிக்கவில்லை. தற்போதுள்ள இலவச மின்சாரம், இலவச தண்ணீர் மாதிரி தொடரும் என்று மட்டுமே அறிவித்துள்ளது. பாஜகவின் உத்தரவாதம் மக்களுக்கு ஒருபோதும் பயன் அளித்தது கிடையாது. அதே போல இதுவும்.
மோடி அரசு பொய்யானது. மோடி அரசின் ஒவ்வொரு தகவல்களும் போலியானவை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஊழல் ஒழிந்துவிடும், கருப்புப் பணம் திரும்ப வரும் என கூறப்பட்டது. ஆனால் ஊழல் ஒழியவில்லை, கருப்புப் பணம் திரும்ப வரவில்லை. பணமதிப்பிழப்புக்குப் பிறகு, ஜிஎஸ்டியை அரசாங்கம் கொண்டு வந்தது, இதன்காரணமாக வணிகர்கள் அழிந்தனர்.
ச 2025ஆம் ஆண்டில் இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என இந்திய இணையதளம் செல்போன் சங்கம் மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் ரிவார்டு தருவதாகக் கூறி புதிய மோசடி நடப்பதாக இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் எச்சரித்துள்ளது. எஸ்பிஐ பரிசை பெற விரும்பினால் ஏபிகே (APK) எனும் பைலை பதிவிறக்கம் செய்யுங்கள் என குறுந்தகவல் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.மோசடி பேர்வழிகள் வங்கியிலிருந்து பணத்தை திருட அனுப்பும் செய்தி அது என இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் எச்சரித்துள்ளது.
தில்லி மெட்ரோ ரயில்களில் மாணவர்களுக்கு சலுகை அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். கெஜ்ரிவால் தனது கடிதத்தில்,”தில்லி மெட்ரோவின் பங்குதாரர்களாக இருப்பதால், மாணவர்களுக்கான சலுகையை ஒன்றிய அரசும், தில்லி அரசாங்கமும் சமமாக ஏற்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
தில்லி சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டார். அதில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிக்கு போட்டியாக “லாட்லி பஹேன் யோஜ னா” திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் கருவுற்ற பெண் களுக்கு 6 ஊட்டச்சத்து தொகுப்பு மற்றும் ரூ.21,000 வழங்கப்படும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச சிலிண்டர் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.500 மானியம் தரப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரபல இந்தி நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியவரை காவல்துறை வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.