தில்லியை தொடர்ந்து மும்பையிலும் கடும் காற்று மாசு
தில்லியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் காற்று மாசு நிலவி வருகிறது. காற்றுத் தரக் குறியீடு 330க்கு மேல் இருப்பதால், தில்லி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்ற னர். குறிப்பாக தில்லி மருத்துவமனை கள் சுவாச நோயாளிகளால் நிரம்பி வரு கின்றன. ஆனால் ஒன்றிய மற்றும் தில்லி பாஜக அரசுகள் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் உள்ளன. இந்நிலையில், தில்லியை போல மகா ராஷ்டிரா தலைநகர் மும்பையிலும் காற்று மாசு பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது. ஞாயிறன்று முதல் மும்பை யில் காற்றுத் தரக்குறியீடு புள்ளிகள் 210ஆக சரிந்துள்ளது. இதனால் மும்பை மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் அசெளக ரியமான உணர்வை எதிர்கொண்டு வரு கின்றனர். மும்பை மட்டுமல்லாமல் மாலாட், போரிவலி, தேவ்னார், வொர்லி மற்றும் மசகாவ் போன்ற புறநகர்ப் பகுதி களில் காற்றின் தரம் மிகவும் மோச மான நிலையில் உள்ளன. கடந்த சில நாட்களாக மும்பையில் தீவிர பனிமூட்டம் நிலவியது. ஆனால் கடந்த ஒரு வாரகாலமாக வெப்பநிலை உயர்ந்து வரும் போதிலும் காற்றின் தரத் தில் முன்னேற்றம் காணப்படாதது மும்பைவாசிகளிடம் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
