states

img

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்  தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

மேற்கு வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆசி ரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறி  2024 இல் சுமார் 25,753 ஆசிரி யர்கள் மற்றும் கல்விப் பணியா ளர்களை கொல்கத்தா உயர் நீதி மன்றம் பணிநீக்கம் செய்து உத்தர விட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மீது நடந்த விசாரணையில் கொல் கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை யே உறுதி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பினால் முறை கேட்டில் ஈடுபட்டவர்களுடன் முறை கேட்டில் ஈடுபடாத ஆசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். இதுஎங்கள் வாழ்க்கையை பாதித் துள்ளது என பாதிக்கப்பட்ட ஆசி ரியர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.  இந்நிலையில் தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கொல் கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் வியாழனன்று முதல் (ஏப்ரல் 10) தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு முன் தினம் (புதன்கிழமையன்று) தெற்கு கொல்கத்தாவில் மேற்கு வங்க பள்ளிக்கல்வி ஆணையத்தின் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெருந்திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் கள் மீது மம்தா அரசின் காவல் துறை காட்டு மிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது.   இந்த தாக்குதலுக்கு, இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரி யர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.