ஆந்திர பேருந்தில் தீ விபத்து ஓட்டுநரின் சாதுரியத்தால் அசம்பாவிதம்
தவிர்ப்பு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதா வரி மாவட்டத்தில் கமன்பாலம் சுங்கச்சாவடி அருகே புதனன்று அதிகாலை விசாகப்பட்டினம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றியது. அதிகாலை 2 மணியளவில் பேருந்து சுங்கச்சாவடியை நெருங்கியபோது டைனமோவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பேருந்து நின்றுள்ளது. ஓட்டுநர் இஞ்சினைப் பரிசோதித்தபோது தீப் பொறிகள் கிளம்பியிருக்கின்றன. இதை யடுத்து அவர் உடனடியாக பேருந்தில் இருந்தவர்களை எழுப்பி எச்சரித்து, வெறும் 10 நிமிடங்களுக்குள் பயணி களையும் அவர்களது உடைமைகளை யும் வெளியேற்றியுள்ளார். மேலும் ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்து முழுவதுமாக தீ பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தச் சம்ப வத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற் படவில்லை, உயிரிழப்பு நிகழாமல் தவிர்க்கப்பட்டது என தெரிவிக்கப்பட் டுள்ளது. சி