states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரைக்கலைஞர் மோகன்லால்

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்பால் ஈர்ப்பு இணையரை போட்டியாளர் வேதலஷ்மி இழிவாகப் பேசியுள்ளார். வேதலஷ்மி  அவர்களே! உங்களால் தன்பால் ஈர்ப்பாளர்களுடன் நிற்க முடியாவிட்டால், நீங்கள் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறுங்கள்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகாரில் வெளிநாட்டினரின் ஊடுருவல் இருப்பதாக பாஜக கூறுகிறது. மோடி 11 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார். அதே போல பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 20 ஆண்டுகளாக பீகாரை ஆட்சி செய்கிறது. மோடி அவர்களே! இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? 

 காங்கிரஸ் எம்.பி., பிரணிதி ஷிண்டே

நாட்டில் வாக்குகள் திருடப்படுகின்றன. பத்திரிகைகள் தங்களது உரிமைகளை இழந்துவிட்டன. ஊடகங்கள் கோடி மீடியாவாக (பாஜக ஆதரவு) மாறிவிட்டன. விவசாயிகள் சாலைகளில் இறங்கிப் போராடுகின்றனர். நாட்டின் நிகழ்வுகள் இவ்வாறு உள்ள நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாள், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கருப்பு நாள்.

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

இந்து மதம், மக்களை வருணாசிரம முறையில் பிரித்தது. மக்களுக்கு சமமான மரியாதையை அது தரவில்லை. அதனால்தான் சீக்கியம், சமணம், பௌத்தம், லிங்காயத்து போன்ற மதங்கள் உருவாகின. இந்து மதமல்லாத வேறு எந்த மதத்திலாவது வருணாசிரம முறை இருக்கிறதா?