states

img

ஸ்கேன் இந்தியா

“போலி” எஞ்சின்

பாஜக ஆட்சியில் போலிகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. போலியான தூதரகமே நடத்தி அவர்கள் ஆளும் உத்தரப்பிரதேசம் சாதனை(!) படைத்தது. போலிகள் பட்டியலில் ஹரியானா இடம் பெறாமல் இருந்தது. தற்போது பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கு எந்த அளவிலும் குறையவில்லை என்று நிரூபித்திருக்கிறார்கள். போலி மருத்துவமனைகளை அமைத்து, போலி மருத்துவர்களைப் பணியில் அமர்த்தி, போலி நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு காப்பீட்டு நிறு வனங்களை ஏமாற்றி பணம் சம்பாதித்திருக் கிறார்கள். உயிரிழந்தவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி உயிர்க்காப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளனர். இந்த போலி மருத்துவமனையின் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் ஐந்து போலி மருத்து வமனைகள் உள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. போலி எஞ்சின் ஆட்சினாலே இதெல்லாம் சாதாரணமப்பா.. என்று எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கின்றன.

“தொய்வு” எஞ்சின்

உத்தரப்பிரதேசக் காவல்துறையின் பணிகளில் தொய்வு  இருக்கிறது என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கலாகியுள்ளது. இந்த அறிக்கையைத் தாக்கல் செய்தவர்கள் எதிர்க்கட்சிகளோ அல்லது அரசை விமர்சனம் செய்பவர்களோ அல்ல. மாநில அரசின் தலைமைச் செயலாளர் சசி பிர காஷ் கோயல்தான் இந்த அறிக்கையை  ஒப்படைத்திருக்கிறார். காவல்நிலையங் களில் சிசிடிவி காமிராக்கள் வைப்பது பற்றித் தொடர்ந்து லக்னோ உயர்நீதிமன்ற அமர்வு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே  இருக்கிறது. ஆனால், காவல்துறையின் அட்டூழியங்கள் அம்பலமாகிவிடும் என்பதால் தொடர்ந்து மாநில அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. அண்மையில் மாற்றுத்திறனாளி ஒருவரைத் தூக்கிச் சென்று காவல்நிலையத்தில் சித்ரவதை செய்திருக்கிறார்கள். அந்த வழக்கில்தான் தலைமைச் செயலாளர் தொய்வு இருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“தள்ளு”மாடல் எஞ்சின்

ஆந்திர உள்ளாட்சிகளின் பதவிக்காலம் பிப்ரவரியில் நிறைவு பெற்றுவிட்டது. கேரளா போன்ற மாநிலங்களில் தவறாமல் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. பாஜக மற்றும் கூட்டாளிகள் ஆளும் மாநிலங்களில் முடிந்த அளவுக்குத் தள்ளிப் போடுகிறார்கள். தற்போது புதிதாக வரையறுக்கப்பட்ட மாவட்டங்களின் அடிப்படையில் நடக்கும் என்று தற்போது அரசு சொல்கிறது. புதிய வார்டுகள், புதிய வாக்காளர் பட்டியல் என்று தள்ளிப்போடுவதற்கான அனைத்துக் காரணங்களையும் எடுத்து வைத்துள்ளனர். இத்தனைக்கும் இந்தப் புதிய வரையறை குறித்து எந்தவிதமான வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. எதிர்க்கட்சிகளோ, “வழக்கு இல்லை என்று சொல்கையில் அவர்கள் வருத்தமாக இருக்கிறார்கள்.. அதனால் என்ன.. தேவைப்பட்டால் இவர்களே யாரையாவது தூண்டிவிட்டு வழக்குப் போட வைத்து விடுவார்கள்” என்று சொல்கிறார்கள். 

“அழிவு” எஞ்சின்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பெரும் காட்டுத்தீ பரவி வருகிறது. பாஜக நிர்வாகமோ அலட்சியமாக இருக்கிறது என்று அப்பகுதியின் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நெருப்பு பற்றிவிட்டது என்ற தகவலைக்கூட தாமதமாகவே வனத்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். நெருப்பு பரவிக் கொண்டிருக்கிறது. இன்னும் வனத்துறை யினரைக் காணவில்லையே என்று மக்கள் கொந்த ளித்தனர். அப்படியா.. தீப்பிடிச்சுருச்சா.. என்று சாவகாச மாக அவர்கள் வந்தனர். பெரும் பசுமைப்பகுதியே அழிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. வனத்துறையின் தாமதம்தான் கூடுதல் கிராமங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் காட்டுப்பகுதிகளை அழிப்பத ற்கான முயற்சிகளை மக்கள் எதிர்த்து வந்தனர்.  மக்களின் எச்சரிக்கைகள் உண்மையாகியுள்ள தையே இந்தக் காட்டுத்தீ காட்டுகிறது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.