ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவிக்காலம் நீட்டிப்பு
ஒன்றிய அரசின் 16ஆவது தலைமை வழக்கறிஞராக (அட் டர்னி ஜெனரல்) ஆர்.வெங்கட்ரமணி 2022 செப்டம்பர் 28ஆம் தேதி பொறுப்பேற் றார். உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞ ரான இவரது பதவிக் காலம் வரும் செப் டம்பர் 30 அன்று முடி வடைகிறது. இந்நிலையில், வெங்கட்ரமணியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது. ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் பதவிக்கால நீடிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கட்ரமணி இதற்கு முன் இந்திய சட்ட ஆணைய உறுப்பினராக 2010, 2013இல் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.