பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரள தனித்துவத்தை அழித்துவிடும்
முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை
கொச்சி பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளாவின் தனித்து வத்தையும், மதச்சார்பற்ற சூழலை யும் அழித்துவிடும் என்று முதலமைச் சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற கேஎஸ்இபி அதிகாரிகள் சங்கத்தின் 24ஆவது மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தல்களில் 25% வாக்குகளையும், சட்டமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மையை யும் பெற உள்ளதாக ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பு அவர்களின் விருப்பம் மட்டுமே. இருப்பினும், இதற்காக எந்த மோசமான வழிகளும் பின் பற்றப்படும் என்பதற்கான முன்னறி விப்பே அமித் ஷாவின் பேச்சு ஆகும். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அனுமதிக்கக்கூடாது கேரளாவில் மக்கள் தங்களுக் கான ஆடைகளை அணிந்து, தங்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப தங்கள் உணவை உண்ணக்கூடிய, பய மின்றி வாழக்கூடிய சூழ்நிலையை அழிக்கும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை இங்கு செயல்படுத்த ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. பாஜக ஆட்சியில் உள்ள அனை த்து மாநிலங்களிலும் ஒரு கொடூ ரமான சிறுபான்மை வேட்டை உள் ளது. சங்-பரிவார் தாக்குதல்களுக்கு அங்குள்ள அரசாங்கங்கள் முழு ஆதரவையும் அளித்து வருகின்றன. கேரளாவில் அவற்றில் எதையும் செயல்படுத்த முடியாது என்பது அவர்களுக்கு வருத்தமாக உள்ளது. சங்-பரிவார் நமது (கேரளம்) சமை யலறைகளுக்குள் நுழைந்து என்ன உணவு தயாரிக்கப்படுகிறது என்ப தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா? என்பதை கேரள மக்கள் சிந்திக்க வேண்டும். இது ஒரு தேர் தல் பிரச்சனை அல்ல. கேரளாவை நாம் பெற்ற பண்புகளுடன் தக்க வைத் துக் கொள்வதற்கான போராட்டம் இது. கருப்புச் சட்டங்களை இயற்றுகிறார்கள் தேசிய சுதந்திரப் போராட்டத் தில் ஆர்எஸ்எஸ் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. அதன் குறைபாடு களை மறைக்க விரும்புவது போல ஒரு வரலாற்றை அவர்கள் புனைய முயற்சிக்கிறார்கள். அவர்கள் மாநி லங்களின் அதிகாரத்தைப் பறிக்கி றார்கள். அவர்கள் ஒன்றிய அரசில் அனைத்து அதிகாரத்தையும் குவிக்கிறார்கள். மாநில அரசுகளை கவிழ்க்க கருப்புச் சட்டங்களை இயற்றுகிறார்கள். அறிவை உள் நாட்டுமயமாக்குதல் என்ற பெயரில் கல்வித் துறையை காவிமயமாக்கு கிறார்கள். இவை அனைத்திற்கும் எதிராக நாம் வலுவான நிலைப் பாட்டை எடுக்க வேண்டும். பல அழுத்தங்கள் இருந்த போதிலும் கேரளாவில் கேஎஸ்இபி (மின்சா ரத்துறை) தனியார்மயமாக்கல் செயல்படுத்தப்படாததற்குக் கார ணம் எல்டிஎப் தெளிவான தொலை நோக்குப் பார்வையைக் கொண்டி ருப்பதே ஆகும்” என அவர் பெரு மிதமாக கூறினார்.