states

சுங்கத்துறைக்கு எதிராக துல்கர் சல்மான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சுங்கத்துறைக்கு எதிராக துல்கர் சல்மான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட கார்களை வாங்கியது தொ டர்பான விவகாரத்தில் பிரபல மலை யாள நடிகர்கள் மம்மூட்டி, பிரித்வி ராஜ், துல்கர் சல்மான், அமித் சக்கா லைக்கல் ஆகியோரின் வீடுகள் உள்பட கேரளாவில் 30க்கும் மேற்பட்ட இடங்க ளில் சமீபத்தில் சுங்கத்துறை சோதனை நடத்தியது. இதில் துல்கர் சல்மானின் வீட்டிலிருந்து கடந்த 2012ஆம் ஆண்டு சென்னையில் பதிவு செய்யப்பட்ட லேண்ட்ரோவர் கார்  (TN 01 AS 0155) உட்பட 2 கார்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், சுங்கத்துறை நடவ டிக்கையை எதிர்த்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் நடிகர் துல்கர் சல்மான் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில்,“வாகனங்கள் அனைத்தும் செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து வாங்கப்பட்டது. சுங்க வரி செலுத்திய ஆவணங்களை கொடுத்த பின்னும் அதி காரிகள் கார்களை பறிமுதல் செய்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் துல்கர் சல்மான் மனு தொடர்பாக, விளக் கம் அளிக்க சுங்கத்துறைக்கு உத்தர விட்டுள்ள உயர்நீதிமன்றம், செப்., 30ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.